ஐ.நா மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டமைக்கு அமெரிக்காவே காரணம்
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டமைக்கு அமெரிக்காவே காரணம் என வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.இலங்கைக்கு எதிராக ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் வாக்களித்த அநேக நாடுகள் அமெரிக்காவிற்கு அஞ்சியே வாக்களித்தன என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.அமெரிக்காவுடனான இரு தரப்பு உறவுகளில் விரிசல் ஏற்படக் கூடாது என்ற அச்சத்தின் காரணமாகவே, தாம் வாக்களித்ததாக சில நாடுகள் தனிப்பட்ட ரீதியில் தம்மிடம் குறிப்பி;ட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் அமர்வுகளின் போது இலங்கை தொடர்ந்து அழுத்தங்களை எதிர்நோக்கி வருவதன் பின்னணியில் அமெரிக்கா செயற்பட்டு வருவதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
இரண்டு அமர்வுகளில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டமை குறித்து ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது அவர்இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply