கொலம்பியாவில் தீவிரவாதிகள் கார் குண்டு தாக்குதல்: ராணுவ அதிகாரிகள் உள்பட 8 பேர் பலி
கொலம்பியாவில் தீவிர வாதிகள் நடத்திய கார் குண்டு தாக்குதலில் போலீஸ் நிலையம் இடிந்து தரை மட்டமானது. அதில் ராணுவ அதிகாரிகள் உள்பட 8 பேர் பலியாகினர்.கொலம்பியாவில் ‘பார்க்’ என்ற தீவிரவாத அமைப்பு கடந்த 50 ஆண்டுகளாக அரசுக்கு எதிரான வன்முறை செயல்களில் ஈடுபட்டு வருகிறது. இதனால் ராணுவத்துக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே நடந்து வரும் உள்நாட்டு போரில் சுமார் 2 லட்சத்து 20 ஆயிரம் பேர் பலியாகி உள்ளனர்.எனவே, இப்பிரச்சினையை முடிவுக்கு கொண்டுவர தீவிரவாதிகளுடன் அரசு சமரச பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இந்த நிலையில் நேற்று கவுகா மாகாணத்தில் இன்ஷா நகரில் தீவிரவாதிகள் கார் குண்டு தாக்குதல் நடத்தினார்கள்.
இன்ஷா நகரின் மையப் பகுதியில் மார்க்கெட் உள்ளது. மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் தீவிரவாதிகள் குண்டுகள் நிரப்பிய காரை நிறுத்தி வெடிக்க செய்தனர்.
அதில் அங்கிருந்த போலீஸ் நிலையம் மற்றும் கடைகள், இடிந்து தரைமட்டமாயின. இதனால் அங்கு பதட்டமும் பரபரப்பும் ஏற்பட்டது. அலறியடித்தபடி மக்கள் அங்குமிங்கும் ஓடினர்.
இத் தாக்குதலில் 8 பேர் பலியாகினர். அவர்களில் 5 ராணுவ அதிகாரிகள், ஒரு போலீஸ்காரர் மற்றும் 2 பொதுமக்களும் அடங்குவர். இச்சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply