மண்­டேலா கற்­றுத்­தந்த பாடங்­களை சில அர­சி­யல்­வா­திகள் மறந்­து­விட்­டனர் :சந்­தி­ரிகா

இலங்­கையின் தற்­போ­தைய நிலை­மையை பார்க்­கும்­போது, அதி­கா­ரத்தில் இருக்க வேண்டும் என்­ப­தற்­காக சில அர­சி­யல்­வா­திகள் மற்ற இனத்தைச் சேர்ந்த மக்­களைக் கொல்­லவும், தாக்­கவும் எரிக்­கவும் தயா­ராக இருக்­கி­றார்கள் என்று முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிகா குமா­ர­துங்க தெரி­வித்­துள்ளார்.இலங்­கையின் முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிகா குமா­ர­துங்க கூறி­யுள்ளார்.
அவர் மேலும் கூறு­கையில்,

தாங்கள் சிங்­கள பெளத்த தேசத்­துக்கு மட்­டுமே பிர­தி­நி­திகள் என்று காட்­டு­வ­தற்­கா­கவே மற்ற சம­யங்­களை, இனங்­களை, சமூ­கங்­களை ஒடுக்கும் நட­வ­டிக்­கை­களில் அவர்கள் ஈடு­பட்­டுள்­ள­தா­கவும் சில அர­சி­யல்­வா­திகள் கூறு கின்­றனர்.

குறிப்­பாக 1983ஆம் ஆண்டு இலங்­கையில் ஒரு சில சிங்­கள கடும்­போக்­கு­வா­தி­களால் தமிழ் மக்­க­ளுக்கு இழைக்­கப்­பட்ட கொடு­மை­களை நினைத்து நான் அரச தலை­வ­ராக தமிழ் மக்­க­ளிடம் மன்­னிப்புக் கோரி­யி­ருந்தேன்.

நாட்டின் தற்­போ­தைய நிலைமை மிக கவ­லை­ய­ளிப்­பதாக உள்­ளது. நாட்டில் இன்­றுள்ள சிங்­கள மக்கள் அனை­வரும் அப்­ப­டி­யில்லை. ஒரு சில சிங்­கள அர­சியல் வாதிகள் தமிழ் மக்­க­ளுக்கு செய்யும் விதங்­களை நினைக்க மிகவும் வேத­னை­யா­க­வுள்­ளது.

மண்­டேலா துர­திஷ்ட வச­மாக இலங்­கைக்­கு­வர முடியா விட்­டாலும் அவர் கற்­றுத்­தந்த பாடங்­களை மறந்து சில கடும்­போக்கு சிங்­கள அர­சி­யல்­வா­திகள் மற்­றைய இன மக்­களை கொடு­மைப்­ப­டுத்­து­கி­றார்கள். இவை­யெல்லாம் மக்­க­ளிடம் வாக்­கு­களைப் பெறுவதற்காகவே செய்கின் றனர்.
சர்வதேச கூட்டங்களில் மண்டேலாவுடன் அடிக்கடி அரு கில் அமரும் சந்தர்ப்பம் கிடைத்ததை எண்ணி நெகிழ்வடை கிறேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply