சர்வதேச அழுத்தங்களுக்கு அடிபணிய வேண்டிய அவசியமில்லை : ஜீ.எல். பீரிஸ்

தேவையற்ற சர்வதேச அழுத்தங்களுக்கு அடிபணிய வேண்டிய அவசியமில்லை என வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். வரலாற்றுக்காலம் முதல் இலங்கை சிறந்த வெளியுறவுக் கொள்கைகளைப் பேணி வருவதாகத் தெரிவித்துள்ளார்.ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களுக்கு அமைவாக செயற்பட முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.நாட்டின் இறையாண்மை மற்றும் சுயாதீனதன்தமையை கருத்திற் கொண்டே நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார். இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்படும் போது அவற்றை முறியடிக்க முயற்சிப்பதில்லை எனவும், அவற்றுக்கு எதிராக போராடி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு ஆறு மாதத்திற்கு ஒரு தடவையும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் விளக்கம் அளிக்க வேண்டிய அவசியம் இலங்கைக்கு கிடையாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மனித உரிமைப் பேரவை விவகாரங்களினால் நாடுகளுக்கு இடையிலான இரு தரப்பு உறவுகளில் விரிசல்கள் ஏற்பட வாய்ப்பு கிடையாது என அவர் தெரிவித்துள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply