உக்ரைனில் அதிபர் பதவி விலக கோரி 2 லட்சம் பேர் போராட்டம்
சோவியத் ரஷியாவில் இருந்து பிரிந்து தனி நாடான உக்ரைனில் தற்போது விக்டர் யனுகோவியுச் அதிபராக உள்ளார். அவரது ஆட்சியில் லஞ்ச, லாவண்யம் அதிகரித்து விட்டதாக புகார் எழுந்துள்ளது. மேலும் இவரை எதிர்க்கும் எதிர்க்கட்சி தலைவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.ரஷியாவின் தலைமையில் இயங்கும் ‘கஸ்டம்ஸ் யூனியன்’ அமைப்பில் உக்ரைனை இணைக்க அதிபர் விளாடி மிர் புதினுடன் ஒப்பந்தம் செய்தார். இதற்கு எதிர்க்கட்சி மற்றும் பொதுமக்கள் இடையே கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
எனவே அதிபர்ய னுகோவியுச் பதவி விலக வலியுறுத்தி தலைநகர் கிவ்வில் நேற்று போராட்டம் நடத்தினர். சிவ் நகரின் தெருக்களில் திரண்டு பேரணியாக சென்ற மக்கள் சுதந்திர தின சதுக்கத்தை சென்றடைந்தனர்.
பேரணியில் சென்றவர்கள் அதிபருக்கு எதிரான கோஷங்கள் அடங்கிய அட்டைகளை கையில் ஏந்தி இருந்தனர். எதிர்ப்பு கோஷங்களை முழங்கினர். போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த பேரணியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் ஆவர். அவர்கள் ஐரோப்பிய யூனியன் மற்றும் உக்ரைன் நாட்டின் கொடிகளை ஏந்தி போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
சுதந்திர தின சதுக்கத்தில் சோவியத் ரஷியாவின் கம்யூனிஸ்டு தலைவரான விளாடிமிர் லெனின் 11 அடி உயர சிலை கடந்த 70 ஆண்டுகளாக உள்ளது. அந்த சிலையை கயிறு கட்டி கீழே சாய்த்தனர். அதை முழுமையாக அகற்றவும் வலியுறுத்தினர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply