பின்லேடன் டாக்டரின் மறுவிசாரணை கோரும் மனு மீதான விசாரணை முடிவடைந்தது

பாகிஸ்தானில் பதுங்கியிருந்த அல்கொய்தா தீவிரவாதி பின்லேடனை அமெரிக்க படைகள் பாகிஸ்தானுக்குள் நுழைந்து அதிரடிதாக்குதல் நடத்தி கொன்றது. பின்லேடன் கொலை செய்யப்பட்டதற்கு அமெரிக்க அதிரடிபடைக்கு அவரது டாக்டர் ஷகீல்அபிரிடி உதவி செய்ததாக பாகிஸ்தான் அவரை கடந்த 2011–ம் ஆண்டு மே மாதம் கைது செய்து வழக்கு தொடர்ந்தது. பின்லேடனின் டாக்டரை விடுவிக்க வேண்டும் என பாகிஸ்தானை அமெரிக்கா வலியுறுத்தி வருகிறது.பின்லேடனின் டாக்டர் மீது தொடரப்பட்ட வழக்கில் இறுதித்தீர்ப்பு 18–ந்தேதி அறிவிக்கப்படும் என அவரது வழக்கை விசாரித்த நீதிபதிகள் அறிவித்து இருந்தனர். இந்த நிலையில் டாக்டர் ஷகீல் அபிரிடி தன் மீது கூறப்பட்ட குற்றச்சாட்டை மறுத்து, தன்மீது சுமத்தப்பட்டுள்ள வழக்கை முழுமையாக மறு விசாரணையும் நடத்த வேண்டும் என வக்கீல் மூலம் மனு செய்தார்.

அவரது மனுவை 3 நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் விசாரித்து வந்தது. டாக்டரின் மறுவிசாரணை கோரும் மனு மீதான விசாரணை முடிவடைந்து விட்டதாகவும், விரைவில் அதன் மீதான தீர்ப்பு அளிக்கப்படும் என நீதிபதிகள் அறிவித்து உள்ளனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply