பரிந்துரைகள் விரைவாக நடைமுறைப்படுத்த வேண்டும்

கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அரசாங்கம் விரைவாக நடைமுறைப்படுத்த வேண்டும் என வணக்கத்துக்குரிய கார்டினல் மெல்கம் ரஞ்சித் வலியுறுத்தியுள்ளார்.இலங்கை கத்தோலிக்க ஆயர்களின் அறிக்கை ஒன்றியினை வெளியிடும் வகையில் கொழும்பில் இடம் பெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றில் கலந்துக் கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டார்.கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு என்பது இலங்கை அரசாங்கத்தினாலேயே உருவாக்கப்பட்ட ஒன்று. எனவே, இதன் பரிந்துரைகளை நாம் நடைமுறைப்படுத்த வேண்டும். அவ்வாறு செய்யவில்லையென்றால் அது சர்வதேசத்திற்கு முன்னால் இலங்கையை பொய்கார நாடாக மாற்றிவிடும்.

இதற்கிடையில், உள்நாட்டு விவகாரங்களில் சர்வதேசத்தின் தலையீடுகளை அனுமதிக்க கூடாது.

அதேநேரம், சர்வதேசம் தலையிடக் கூடாது என்று கூறிக் கொண்டு நமது பிரச்சினையை தீர்க்காமல் இருந்து விடவும் கூடாது என்று வணக்கத்துக்குரிய கார்டினல் மெல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply