திருச்சியில் குண்டு போட்டவர்கள் எமது மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் கதைக்கின்றனர்: டக்ளஸ்

வன்னியில் குண்டு போட்டால் கொழும்பில் குண்டு வெடிக்கும் எனக் கூறிவிட்டு திருச்சிபோய் குண்டு போட்டவர் இன்று எமது மக்களின் பிரச்சினைகள் தொடர்பாக பேசுகின்றார் என தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, மக்களின் பிரச்சினைகளை பேசுபவரின் ஓட்டுக்குழுதான் எமது மக்களின் பிரச்சினைகளுக்கு காரணமாகும் எனவும் தெரிவித்தார்.பாராளுமன்றத்தில் இடம்பெற்ற கைத்தொழில் வணிக அபிவிருத்தி மற்றும் சிறுகைத்தொழில்கள் மற்றும் பாரம்பரிய கைத்தொழில்கள் அபிவிருத்தி அமைச்சுக்களின் மீதான குழு நிலை விவாதத்திற்கு பதிலளித்து உரையாற்றும் போதே அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இதனைத் தெரிவித்தார்.

அமைச்சர் பதிலளித்து பேசுவதற்கு முன்பதாக பேசிய தமிழ் தேசிய கூட்டமைப்பு எம்.பி செல்வம் அடைக்கலநாதன் எழுப்பிய சில கேள்விகளுக்கு பதிலளித்து உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

அமைச்சர் தொடர்ந்து பதிலளிக்கையில்,

கூட்டமைப்பு என்பது பல குழுக்கள் சேர்ந்து ஒட்டியது தான் ஓட்டுக்குழுவாகும். மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்காக நாம் பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுத்தோம். யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், வவுனியா ஆகிய 5 மாவட்டங்களுக்கும் எமது அமைச்சின் மூலம் நாம் நிறைய செய்திருக்கின்றோம்.

ஆனால் நீங்கள் ஓட்டுக்குழு என்பதால் அது உங்களுக்கு புரியாமல் இருக்கின்றது. நீங்கள் உண்மையை ஏற்றுக்கொண்டு செயற்படுபவர்கள் அப்படியென்றால் எமது மக்களை எவ்வளவு விரைவாக முன்னேற்ற முடியுமோ அதற்கான அனைத்தையும் நாம் செய்வோம் என்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply