பொது மக்களின் இடங்களில் இருந்து இராணுவம் வெளியேற்றப்பட வேண்டும்

இராணுவத்தினரால் கையகப்படுத்தப்பட்ட காணிகளின் விபரங்க ளின் வெளிப்படைத் தன்மை பேணப்படுவதுடன் பொது மக்களின் இடங்களில் இருந்து இராணுவம் முற்றாக வெளியேற்றப்பட வேண்டும் என்று ஐ.நா.வின் அகதிகளுக்கான விசேட அறிக்கையாளர் சலோகா பெயானி தெரிவித்துள்ளார்.இலங்கையில் போரினால் இடம்­பெ­யர்ந்­த­வர்­களின் பிரச்­சி­னைக்கு ஒரு காத்­தி­ர­மான தீர்வைக் காண்­ப­தற்கு வளர்ச்­சியை அடிப்­ப­டை­யாகக் கொண்ட யுக்தி தேவை என்றும் அவர் கூறியுள்ளார். அண்­மையில் இலங்கைக்கு விஜயம் செய்த அவர், அது குறித்த அறிக்கை ஒன்றை ஐ.நா.மனித உரி­மைகள் ஆணைக்­கு­ழு­வுக்கு சமர்ப்­பித்­துள்ளார். அந்த அறிக்­கை­யி­லேயே அவர் இவ்­வாறு தெரிவித்துள்ளர்.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ள தாவது;

இலங்­கையில் போர்ப் பகு­தி­களைப் பொறுத்­த­வரை அங்­குள்ள பெண்கள் மற்றும் சிறு­மி­களின் உடல் ரீதி­யான தன்­னா­திக்கம், அவர்­க­ளது இனப்­பெ­ருக்­கத்­துக்­கான உரிமை ஆகி­யவை பாது­காக்­கப்­பட வேண்டும்.

காணி­க­ளுக்­கான உரிமை பாது­காக்­கப்­ப­டு­வ­துடன், உரிய விகி­தத்தில், ”தேசிய பாது­காப்­புக்­கான இரா­ணுவ கரி­ச­னை­களும், பொது­மக்­களின் நட­மா­டு­வ­தற்­கான, வாழ்­வ­தற்­கான இடத்தை தேர்வு செய்­வ­தற்­கான உரி­மையும்” சம­நி­லையில் பேணப்­பட வேண்டும் .

இரா­ணுவ பிர­சன்னம்

இரா­ணு­வத்­தினால் கைய­கப்­ப­டுத்­தப்­பட்ட காணி­களின் விப­ரங்­களில் வெளிப்­ப­டைத்­தன்மை பேணப்­ப­டு­வ­துடன், பொது­மக்கள் செயற்­படும் இடங்­களில் இருந்து இரா­ணுவம் முற்­றாக வெளி­யேற்­றப்­பட வேண்டும். கடந்த 30 வருட போரினால் பாதிக்­கப்­பட்ட இடம்­பெ­யர்ந்­த­வர்கள் தமது சொந்த இடங் ­க­ளுக்கு திரும்­பு­வ­தற்­கான ஒரு
நிலைமை ஏற்­ப­டுத்­தப்­பட வேண்டும்.

போருக்குப் பின்னர் நிவா­ரண நட­வ­டிக்­கை­களில் இருந்து அபி­வி­ருத்தி நட­வ­டிக்­கை­க­ளுக்கு மாறு­கின்ற காலப்­ப­கு­தியில், இடம்­பெ­யர்ந்­த­வர்­களின் பிரச்­சி­னை­களை தீர்ப்­ப­தற்­கான காத்­தி­ர­மான நட­வ­டிக்­கை­களை அர­சாங்­கமும், வளர்ச்­சிக்­கான செயற்­பாட்­டா­ளர்­களும் மேற்­கொள்ள வேண்டும்.

போரில் இடம்­பெ­யர்ந்த அக­தி­களை மீளக்­கு­டி­ய­மர்த்த அர­சாங்கம் கணி­ச­மான நடவடிக்கைகளை எடுத்துள்ள போதிலும்இ கணிசமான
தொகையினர் இன்னமும் இடம்பெயர்ந்த நிலையிலேயே தொடர்வதாகவும்இ இருப் பிடங்களுக்கு திரும்பிய பலர் மோசமான நிலையில் இன்னமும் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply