மரணம் அடைந்த மண்டேலா உடல் நாளை அடக்கம்
தென் ஆப்பிரிக்கா முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலா (95). நுரையீரல் தொற்றால் பாதிக்கப்பட்டு பல மாதங்களாக அவதிப்பட்ட அவர் கடந்த 5–ந் தேதி ஜோகனஸ்பர்க் நகரில் மரணம் அடைந்தார். அதை தொடர்ந்து அவரது உடலுக்கு அஞ்செலி செலுத்தும் நிகழ்ச்சி கடந்த 10–ந் தேதி ஜோகனஸ்பர்க் மைதானத்தில் நடந்து. அதில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, காங்கிரஸ் தலைவர் சோனியா, அமெரிக்க அதிபர் ஒபாமா உள்ளிட்ட பல நாடுகளை சேர்ந்த தலைவர்கள் பங்கேற்று இறுதி அஞ்சலி செலுத்தினர்.அதை தொடர்ந்து பொதுமக்கள் இறுதி அஞ்சலிக்காக அவரது உடல் 3 நாட்கள் தலைநகர் பிரிட்டோ ரியாவில் உள்ள அரசு கட்டிடத்தில் வைக்கப்பட்டிருந்தது. அதில் ஏராளமானாவர்கள் வரிசையில் காத்திருந்து அஞ்சலி செலத்தினர்.
இன்று காலை மண்டேலா உடல் இளம் வயதில் அவர் வாழ்ந்த சேப் மாகாணத்தின் பூர்வீக குனு கிராமத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கும் ஏராளமானவர்கள் அவரது உடலுக்கு இறுதி மரியாதை செய்தனர்.
மண்டேலாவின் இறுதி சடங்கு நாளை (15–ந் தேதி) நடக்கிறது. அதை தொடர்ந்து அவரது குடும்பத்துக்கு சொந்தமான தோட்டத்தில் உடல் அடக்கம் செய்யப்படுகிறது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply