காஷ்மீர் விவகாரத்தில் அமெரிக்கா தலையிட வேண்டும்: பாகிஸ்தான்

காஷ்மீர் விவகாரம் தொடர்பான பிரச்னையில் தீர்வு ஏற்பட அமெரிக்கா தலையிட வேண்டும் என்று பாகிஸ்தான் மீண்டும் வலியுறுத்தியுள்ளது. நெதர்லாந்தின் “தி ஹேக்’ நகரில் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஜான் கெர்ரியை திங்கள்கிழமை சந்தித்த பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப், காஷ்மீர் விவகாரம் கண்டிப்பாக தீர்க்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.இது தொடர்பாக அவர் கூறுகையில், “காஷ்மீர் விவகாரம் தொடர்பான பேச்சுவார்த்தை நடவடிக்கைக்கு ஒவ்வொரு முறையும் இந்தியா தயங்குகிறது. இந்த பிரச்னை, இருநாடுகளால் தீர்க்க முடியாத பட்சத்தில் 3-வது நாட்டின் தலையீடு அவசியம்’ என்று தெரிவித்தார். கடந்த அக்டோபர் மாதம் அமெரிக்க அதிபர் ஒபாமாவுடனான சந்திப்பின்போது இதேபோன்ற கோரிக்கையை ஷெரீப் முன்வைத்தது நினைவுகூரத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply