இலங்கை போர்க் குற்றங்கள் குறித்து பாரபட்சமற்ற விசாரணை

இலங்கைக்கு எதிராக ஐ.நா. சபையில் அமெரிக்கா கொண்டுவரவுள்ள தீர்மான முன்வரைவில், விடுதலைப்புலிகளுடனான இறுதிக்கட்டப் போரின்போது இரு தரப்பினரும் ஈடுபட்டதாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள் குறித்து பாரபட்சமற்ற விசாரணை நடத்தப்படவேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டுவரவிருக்கும் மூன்றாவது தீர்மான முன்வரைவான இதில் கூறப்பட்டுள்ளதாக கொழும்பிலிருந்து வெளியாகும் பத்திரிகை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

இலங்கை உள்நாட்டுப் போரின்போது இரு தரப்பினரும் ஈடுபட்டதாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள் குறித்தும், மனித உரிமை மீறல்கள் குறித்தும் முழு உண்மைகளையும் வெளிக்கொண்டு வர, யாரும் தண்டனையிலிருந்து தப்பாத வகையில், தகுந்த நிபுணர்களைக் கொண்டும், உரிய விதிமுறைகளைப் பின்பற்றியும் பாரபட்சமற்ற விசாரணை நடத்தப்படவேண்டும்.

இலங்கை அரசு தானாகவே விசாரணை நடத்தி அறிக்கை (எல்எல்ஆர்சி) சமர்ப்பித்த காலக்கட்ட நிகழ்வுகளைக் குறித்தே இத்தகைய விசாரணையும் நடத்தப்பட வேண்டும் என அந்தத் தீர்மானத்தின் முன்வரைவில் வலியுறுத்தப்பட்டுள்ளதாக அந்த பத்திரிகை செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply