ஆப்கானிஸ்தானில் தலைமை தேர்தல் அலுவலகத்தில் தீவிரவாதிகள் தாக்குதல்: 10 பேர் பலி

ஆப்கானிஸ்தானில் தலைமை தேர்தல் அலுவலகத்தில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 10 பேர் பலியாகினர்.

ஆப்கானிஸ்தானில் இன்னும் 2 வாரத்தில் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. அதை சீர்குலைக்கும் நடவடிக்கையில் தலிபான் தீவிரவாதிகள் ஈடுபட்டுள்ளனர். தலைநகர் காபூலில் தலைமை தேர்தல் அலுவலகம் உள்ளது. நேற்று அங்கு தலிபான்களின் தற்கொலை படையினர் புகுந்தனர். அவர்களுடன் துப்பாக்கி ஏந்திய தீவிரவாதிகளும் வந்தனர்.

பின்னர் அங்கிருந்த ஊழியர்களை துப்பாக்கி முனையில் சிறை பிடித்தனர். இதற்கிடையே தகவல் அறிந்ததும் ராணுவ வீரர்கள் அங்கு வந்து தீவிரவாதிகளின் மீது அதிரடி தாக்குதல் நடத்தினர்.

பதிலுக்கு தீவிரவாதிகளும் சுட்டனர். இதனால் இருதரப்பினருக்கும் இடையே கடும் துப்பாக்கி சண்டை நீடித்தது. சுமார் 2 மணி நேரம் இச்சண்டை நடந்தது.

அதில், 5 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்கள் தவிர 2 போலீசார் உள்பட 5 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தில் மொத்தம் 10 பேர் பலியாகினர்.

இந்த தகவலை உள்துறை துணைமந்திரி ஜெனரல் அயூப்சாலங்கி தெரிவித்தார். தாக்குதல் நடந்த தேரதல் தலைமை செயலகத்தின் அருகேதான் அதிபர் தேர்தல் வேட்பாளர்களில் ஒருவரான அஷ்ரப் கானியின் வீடு உள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply