மாயமான விமானம்: மீண்டும் தேடும் பணியை இன்று தொடங்கியது : ஆஸ்திரேலியா
கோலாலம்பூரிலிருந்து கடந்த 8ம் தேதி 239 பயணிகளுடன் பெய்ஜிங் புறப்பட்ட மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் மாயமனது. அந்த விமானம் இந்திய பெருங்கடலின் தென் பகுதியில் விழுந்து நொறுங்கி விட்டதாக, இங்கிலாந்து நாட்டின் செயற்கைக்கோள் நிறுவனம் இன்மார்சாட் அளித்த தகவலை மேற்கோள்காட்டி, விமான விபத்தை மலேசிய பிரதமர் நஜிப் ரசாக் நேற்று முன்தினம் (திங்கட்கிழமை) உறுதி செய்தார். இதையடுத்து நேற்று மோசமான வானிலை நிலவியதால் விமானத்தை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுவந்த ஆஸ்திரேலியா தனது தேடும் பணியினை நிறுத்திவிட்டதாக அறிவித்தது.
ஆனால், தற்போது வானிலை சீரடைந்துள்ளதால், மீண்டும் விமானத்தை தேடும் பணி துவக்கப்பட்டுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply