காணாமல் போனோர் தொடர்பான ஆணைக்குழு 1983 – 2009 வரையான சம்பவங்களை விசாரிக்க தீர்மானம்

காணாமல் போனவர்கள் தொடர்பாக ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணைக் குழு 1983இல் இருந்து 2009ஆம் ஆண்டு வரையான காலப்பகுதி யில் இடம்பெற்ற சம்பவங்கள் குறித்து விசாரணை நடத்தவுள்ளது. கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைக்கு அமைய ஜனாதிபதி அவர்களினால் நியமிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு மாகாணங்களில் காணாமல் போனவர்கள் எனக் கூறப்படும் நபர்கள் தொடர்பாகக் கிடைக்கப்பெற்றுள்ள முறைப்பாடுகளை விசாரணை செய்வதற்கு நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழு வானது 1990ஆம் ஆண்டு முதல் 2009ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் இடம்பெற்ற சம்பவங்கள் குறித்தே இதுவரையில் விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.

இந்த நிலையில் 1990 என்ற கால எல்லை 1983 ஏழு ஆண்டுகளுக்குப் பின்நோக்கிக் கொண்டு செல்லப்பட்டுள்ளது. இதற்கமைய 1983ஆம் ஆண்டிலிருந்து 2009ஆம் ஆண்டு வரையில் இடம்பெற்ற சம்பவங்கள் குறித்த விசாரணைகளை இக்குழு மேற்கொள்ளவுள்ளது.

1855/19 2014 மார்ச் மாதம் 25ஆம் திகதி செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் இந்த அறிவித்தலை ஆணைக்குழுவின் உறுப்பினர்களுக்கு விடுத்துள்ளார்.

இந்த வர்த்தமானி அறிவித்தலில் ஆணைக்குழுவின் உறுப்பினர்களான மக்ஸ்வெல் பரணகம, டி.பி.பி.சுரஞ்சனா வித்யாரட்ன மற்றும் மனோ இராமநாதன் ஆகியோருக்கு இந்த உத்தரவை ஜனாதிபதி பிறப்பித்துள்ளார். இந்த விசாரணைகளின் கால எல்லையை மாற்றம் செய்தமையை மதிப்பதாக ஆணைக்குழுவின் செயலாளர் குணதாச தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம், கிளிநொச்சி மற்றும் மட்டக்களப்பு ஆகிய பகுதிகளில் சாட்சியங்களைப் பதிவுசெய்யும்போது பல்வேறு அமைப்புக்களால் பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து பல முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றன. எனினும், குறிப்பிட்ட கால எல்லைக்குள் உட்பட்ட விடயங்களை மாத்திரமே எம்மால் ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இருந்தது என்றும் அவர் குறிப்பிட்டார்.

காணாமல் போனவர்கள் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்வதற்கு நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக் குழுவின் ஆயுட்காலம் 2014ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் வரை நீடிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply