யுத்த குற்ற சர்வதேச விசாரணைக்கு இலங்கை மீது அழுத்தம் கொடுக்க வேண்டும் : காங்கிரஸ்

இலங்கை யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் நம்பகமான விசாரணை நடத்தப்பட வேண்டுமென இந்திய காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் நம்பகமானதும், காலவரையறையுடன் கூடியதுமான விசாரணை நடத்தப்பட வேண்டுமென காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது. இலங்கை மீதான விசாரணை குறித்து சர்வதேச அழுத்தம் அவசியம் என அக்கட்சி குறிப்பிட்டுள்ளது. இறுதிக் கட்ட யுத்தத்தின் போது இடம்பெற்றதாக குறிப்பிடப்படும் மனித உரிமை மீறல்கள் மற்றும் யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் நம்பகமான விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும், ஏனைய நாடுகளுடன் இணைந்து செயற்பட உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

காங்கிரஸ் கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் இந்த விடயம் உள்ளடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை தமிழ் மக்களினதும் ஏனைய சிறுபான்மை இன சமூகங்களினதும் உரிமைகளை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.

வடக்கு கிழக்கில் உரிய அதிகாரப் பரவலாக்களை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளது.

தமிழ் பேசும் சிறுபான்மை மக்களின் வாழ்க்கையை கௌரவமான முறையில் கட்டியெழுப்ப ஒத்துழைப்பு வழங்கப்படும் என குறிப்பிட்டுள்ளது.

அண்டை நாடுகளுடனும் ஏனைய பலம்பொருந்திய நாடுகளுடனும் சிறந்த உறவுகளைப் பேண விரும்பவதாக தெரிவித்துள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply