கடலில் மிதந்த பொருட்கள் மாயமான விமானத்தின் உடைந்த பாகங்கள் இல்லை
மலேசியாவின் தலைநகரான கோலாலம்பூரில் இருந்து, சீனாவின் தலைநகரான பீஜிங்கிற்கு 239 பேருடன் புறப்பட்டு சென்ற விமானம் கடந்த 8-ந்தேதி அதிகாலை நடுவானில் மாயமானது. அதன் கதி என்ன என்பது குறித்து இதுவரை உறுதியான தகவல் ஏதுமில்லை. இந்த நிலையில் இந்திய பெருங்கடலில் விமானத்தை தேடும் பகுதி மாற்றபட்டு உள்ளது. தற்போது 1100 கீமீட்டர் வடக்கில் தேடும் பணி தொடங்கி உள்ளது இங்கு நம்பகமான புதிய ஆதாரங்கள் கிடைத்து உள்ளது.
புதிய தேடும் பகுதி 319000 சதூர கிலோமீட்டர் ஆகும் இது பெர்த்தின் மேற்கே 1850 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது.
8 விமானங்கள் 6 கப்பல்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு உள்ளன.ஆஸ்திரேலிய பிரதம மந்திரி டோனி அபோட் கூறும் போது பெர்த்தில் உள்ள கடற்படை கப்பலில் கறுப்பு பெட்டி மீட்பு கருவிகள் தயார் நிலையில் உள்ளது.தேவை என்றால் அது தேடப்படும் பகுதிக்கு எடுத்து செல்லப்படும்.நாங்கள் இந்த வேலைக்கான கால அளவை நிர்ணயிப்பது மிகவும் கடினம் எனறு கூறினார்.
இதனிடையே, கடலில் நீலம் மற்றும் பழுப்பு நிறம் உள்ளிட்ட பல நிறங்களில் சில பொருட்கள் மிதந்ததாகவும் அது மாயமான மலேசிய விமானத்தின் நிறங்களை போன்ற தோற்றத்தில் உள்ளது. எனவே, அவை மாயமான மலேசிய விமானத்தின் பாகங்களாக இருக்கலாம் என்று கூறப்பட்டது.
இந்த நிலையில், விமானத்தின் பாகங்கள் மிதந்ததாக என்று கூறப்பட்ட குறிப்பிட்ட கடல் பகுதிக்கு சென்றிருந்த சீன மற்றும் ஆஸ்திரேலியக் கப்பல்கள் முதல் தடவையாக தற்போது பல பொருட்களை நீரில் இருந்து எடுத்துள்ளன.
சீனக் கப்பல்கள் வலையைப் பயன்படுத்தி பொருட்களை தண்ணீரில் இருந்து எடுப்பதை தொலைக்காட்சிப் படங்கள் காட்டியுள்ளன.ஆனால் அவையெல்லாம் விமானத்திலிருந்து வந்திருக்கக்கூடிய பொருட்கள் அல்ல என்று தெளிவாகத் தெரிகிறது. கண்டெடுக்கப்பட்ட பொருளில் எதுவுமே காணாமல்போன MH370 விமானத்துடன் தொடர்புடையது என்று இதுவரை உறுதிசெய்யப்படவில்லை.
மாயமான விமானம் கடலில் விழுந்ததாக அறிவித்தது எப்படி?
மலேசியாவிலிருந்து சீனாவுக்கு செல்லும் வழியில் மாயமான எம்௩70 விமானம் கடலில் விழுந்து மூழ்கியதாக இம்மாதம் 24-ஆம் தேதி மலேசிய அரசு அறிவித்தது எப்படி? என அவ்விமானத்தில் பயணித்தவர்களின் உறவினர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
சீனாவிலிருந்து மலேசிய தலைநகர் கோலாலம்பூருக்கு ஞாயிற்றுக்கிழமை வந்த எம்௩70 பயணிகளின் உறவினர்கள் 29 பேர் அங்கு செய்தியாளர்களை சந்தித்து, விமானம் விழுந்து நொறுங்கியதற்கான ஆதாரத்தை மலேசிய அரசு அளிக்க வேண்டும் என கோஷமிட்டனர்.
உறவினர்களின் பிரதிநிதியான ஜியாங் ஹுயி அப்போது கூறுகையில், “”விமானம் மாயமானது முதல் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் தவறான தகவல்களை அளித்து வந்ததற்காகவும், விமானம் கடலில் விழுந்து நொறுங்கியதாக நேரடி ஆதாரமில்லாமல் அறிவித்ததற்கும் மலேசிய அரசு மன்னிப்பு கோர வேண்டும்” என்று கூறினார்.
விழுந்து நொறுங்கியதாக அறிவிக்கப்பட்ட எம்௩70 விமானத்தில் இருந்த 239 பேரில் 154 பேர் சீனர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
கருப்புப் பெட்டியைத் தேடி விரைந்தது ஆஸ்திரேலிய கப்பல்: இதற்கிடையே, விமானம் விழுந்து முழ்கியிருக்கலாம் என சந்தேகிக்கப்படும் இந்தியப் பெருங்கடல் பகுதியை நோக்கி, கருப்புப் பெட்டியைக் கண்டறியும் கருவியுடன் ஆஸ்திரேலிய போர்க்கப்பல் ஒன்று விரைந்துள்ளது.
ஆஸ்திரேலியாவிலிருந்து 1,850 கி.மீ. தொலைவிலிருக்கும் அந்தப் பகுதியை அக்கப்பல் சென்றடைய 3 முதல் 4 நாள்கள் வரை ஆகும் எனக் கூறப்படுகிறது.
கருப்புப் பெட்டியைக் கண்டறியும் நவீன கருவியுடன், ஒரு ஆளில்லா நீர்மூழ்கி வாகனமும், கடலுக்கடியில் தேடுதல் பணியை மேற்கொள்வதற்கான பிற சாதனங்களும் அக்கப்பலில் எடுத்துச் செல்லப்படுகின்றன.
முன்னதாக, சீனா மற்றும் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த கப்பல்கள் இந்தியப் பெருங்கடலிலிருந்து சனிக்கிழமை கண்டெடுத்த சில பொருள்கள், மாயமான எம்௩70 விமானத்தோடு தொடர்புடையவைதானா என்பது இன்னமும் உறுதிப்படுத்தப்படவில்லை.
அந்த விமானம் மாயமாகி மூன்று வாரங்களைக் கடந்துவிட்ட நிலையில், அதனைத் தேடும் பணியில் ஞாயிற்றுக்கிழமையும் 10 விமானங்கள் மற்றும் 8 கப்பல்கள் ஈடுபடுத்தப்பட்டன.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply