பாதுகாப்பான விமான போக்குவரத்து: இலங்கை முன்னிலையில்
இலங்கையின் விமான போக்குவரத்து கட்டுப்பாடு பாதுகாப்பான முறையில் உள்ளது. இவ்விடயத்தில் ஆசிய நாடுகளின் மத்தியில் இலங்கை முன்னிலையில் இருப்பதாக விமான நிலைய மற்றும் விமானப் போக்குவரத்து நிறுவனத்தின் தலைவர் பிரசன்ன விக்ரமசூரிய தெரிவித்தார். சிவில் வான்வழிச்சேவைகள் அமைப்பான கன்சோ அமைப்பின் ஆசிய பசுபிக் மாநாடு நேற்று கொழும்பில் ஆரம்பமானது. சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிரியங்கர ஜயரட்ண தலைமையில் ஆரம்பமான இந்த மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பிரசன்ன விக்ரமசூரிய இவ்வாறு கூறினார்.
சிவில் விமான சேவைகள் பிரதியமைச்சர் கீதாஞ்சன குணவர்த்தன, கன்சோ அமைப்பின் பணிப்பாளர் ஜெவ் பூல், பல்வேறு நாடுகளின் முக்கியஸ்தர்கள் பலர் இம்மாநாட்டில் கலந்துகொண்டிருந்தனர். அங்குரார்ப்பண நிகழ்வு நேற்று முற்பகல் 9 மணிக்கு கொழும்பு சினமன்ட் கிராண்ட் ஹோட்டலில் நடைபெற்றது.
விமான நிலைய மற்றும் விமான சேவைகள் நிறுவனம் ஏற்பாடு செய்திருக்கும் இம்மாநாடு நேற்றும் இன்றும் நடை பெறுகிறது. ஆசிய பசுபிக் பிராந்தியத்தில் பாதுகாப்பான, ஸ்திரமான வான் போக்குவரத்து அதிகரிப்பை உறுதிப்படுத் துவது என்ற தொனிப்பொருளில் இம்மாநாடு நடைபெறுகிறது.
நாட்டின் பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கும் ஒரு துறையாக வான்போக்குவரத்து காணப்படுகிறது. இலங்கையிலும் வான் போக்குவரத்து அதிகரித்துள்ளது. இலங்கையின் வான்போக்குவரத்து கட்டுப்பாடு பாதுகாப்பான முறையில் பேணப்படுகிறது. இதனால் தான் இதுவரை எந்தவித மான அனர்த்தங்களும் ஏற்படவில்லை. அதிகரித்துவரும் வான் போக்குவரத்துப் பவனைக்கு ஏற்ப இலங்கையை கேந்திர நிலையமாக மாற்றுவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுத்திருப்பதாக விமான நிலைய மற்றும் விமானப் போக்குவரத்து நிறுவனத்தின் தலைவர் பிரசன்ன விக்ரமசூரிய கூறினார்.
2030ஆம் ஆண்டு விமானப் போக்குவரத்துப் பயணிகளின் எண்ணிக்கை தற்போது உள்ளதைவிட மூன்று மடங்காக அதிகரிக்கும். அதற்கேற்றவகையில் இலங்கையின் விமானப் போக்குவரத்துத் துறையை அபிவிருத்தி செய்ய அரசு திட்டமிட்டிருப்பதாக சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிரியங்கர ஜயரட்ண மேலும் தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply