இளைஞர்களின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு கொள்கைகள் வகுக்க வேண்டும் : ஜனாதிபதி
ஆதிக்கவாத மனோபாவத்தை ஒருபுறம் ஒதுக்கிவிட்டு தற்கால இளைஞர் சமூகத்தினர் வளர்ச்சியடைந்துள்ளனர் என்பதையும், அவர்கள் சமூக அபிவிருத்தியில் பங்கேற்பதற்கும் பங்களிப்புச் செய்வதற்கும் வாய்ப்புகள் அவசியம் என்பதையும் நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். இளம் பங்கேற்புக்கு இடம்கிடைக்கக்கூடிய வகையில் எமது பாரம்பரிய மற்றும் தொன்றுதொட்டுவந்த திட்டங்களையும் மீண்டும் அமைக்க வேண்டியவர்களாக நாம் இருக்கின்றோம். நாம் சிந்திக்கும் விதம் மாறவேண்டும். இளைஞர்கள் தொடர்பாக கொள்கை மற்றும் சிந்தனையோட்டத்தில் நாம் வேகமாக எதிர்கால நடவடிக்கைகளை எடுக்கவேண்டியுள்ளது.
ஹம்பாந்தோட்டை மாகம்புர றுஹ¥ணுபுர சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று உலக இளைஞர் மாநாட்டை ஆரம்பித்துவைத்து உரையாற்றிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் இவ்வாறு தெரிவித்தார்.
பிரதமர் டி.எம்.ஜய ரட்ண, அமைச்சர்கள், ஐ.நா. சபையின் விசேட பிரதிநிதிகள் உட்பட உள்நாட்டு, வெளிநாட்டு இளைஞர்கள் பெருமளவில் கலந்து கொண்ட இந்நிகழ்வில் ஜனாதிபதி தொடர்ந்தும் உரையாற்றுகையில், இலங்கையில் முதல்தடவையாக உலக இளைஞர் மாநாடு நடைபெறுகிறது. இம்மாநாட்டுக்கு வருகை தந்துள்ள அனைவரையும் வரவேற்பதில் பெருமையடை கிறேன். பொதுச் சபையின் தலைவர் மற்றும் ஐ.நா. செயலாளர் நாயகத்தின் இளைஞர் விவகாரங்களுக்கான விசேட பிரதிநிதி ஆகியோர் இம்மாநாட்டுக்கு வருகை தந்துள்ளமை இலங்கைக்கும், அதேபோன்று இளைஞர் பிரதிநிதிகளுக்கும் பெரும் கெளரவமாகும்.
இளைஞர்களுடன் நேரடியாகத் தொடர்பு கொண்டு அவர்களது பிரச்சினைகளுக்கு செவி கொடுப்பதும், அவர்கள் மத்தில் கருத்துக்களைப் பகிர்வதும் முக்கியமான விடயங்களாகும். 2011 ஜூன் மாதத்தில் ஐக்கிய நாடுகள் சபையின் இளைஞர் விவகார உயர்மட்ட செயலமர்வு இடம்பெற்றபோது இளைஞர்கள் தினம் தினம் முகங்கொடுக்க நேரும் சவால்கள் தொடர்பில் கருத்துக்களை முன்வைத்ததுடன், இலங்கையில் அடுத்த உலக இளைஞர் மாநாட்டை நடத்துவதற்கு முன்மொழிவு செய்தோம். இலங்கையில் வாழும் 20 மில்லியன் மக்களில் 26 வீதமானவர்கள் இளைஞர்களாவர். பயங்கரவாதம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட பின்னர் அவர்கள் பாதுகாப்பையும், சிறந்த சுபீட்சம் மிகுந்த இலங்கையையும் அவர்கள் மீள எதிர்பார்த் தார்கள். உலகம் அன்றும் இன்றும் பல இளைஞர் தலைமுறைகளைக் கொண்டுள்ளது. தினம் தினம் அதிகரிக்கும் இளைஞர் தொகையைக் கருத்தில் கொள்ளாது அபிவி ருத்திக்கான நிகழ்ச்சி நிரலையோ 2015ஆம் ஆண்டுக்கான அபிவிருத்தியையோ பற்றிப் பேச முடியாது. தற்போதைய இளைஞர்கள் பெருமளவு பொறுப்புக்களை எதிர்நோக்கியுள் ளனர். தினம் தினம் அதிகரிக்கும் வயோதிபர்களைக் கவனிக்கும் பொறுப்புடன், நமது எதிர்காலத்துக்கான வழிவகைகளைத் தேடும் பொறுப்பு தங்களுக்குள்ளது.
இவ்விடயத்தில் கவனம் செலுத்தாவிட்டால் கொள்கைகள் வகுப்பவர்களுக்கும் நாடுகளின் தலைவர்களுக்கும் மற்றும் பூகோள சமூகத்தை நிர்வகிப்பதற்கும் பல சிக்கல்கள் ஏற்படலாம்.
தேசிய மற்றும் சர்வதேச மட்டத்திலான அபிவிருத்தி வேலைத்திட்டக்களில் இளைஞர்களின் பங்களிப்பு அவசியம் என்பதைக் குறிப்பிட விரும்புகிறேன். அத்தகைய முக்கிய விடயத்திற்கு இத்தகைய உலக இளைஞர் மாநாடுகள் பொருத்தமானதாகும்.
அர்த்தமுள்ள செயற்பாட்டுக்காக தனது ஆற்றலையும் சக்தியையும் பயன்படுத்துவது தொடர்பாக சிறந்த புரிந்துணர்வை இளைஞர்களுக்கு வழங்கவேண்டும். அவர்களுடைய புதிய உற்பத்திகளையும் புத்தாக்கங்களையும் புதிய அறிவை ஆராய்வதற்கும் எதிர்கால உலகத்தைத் தயார்படுத்துவதற்கும் மிக முக்கியமானதாக அமைகின்றது. தொழில் முயற்சியுள்ள இளைஞர்கள் பசுமை, சக்தி, தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம், வாணிபம் என்பவற்றிற்கு செயலூக்கத்துடன் பங்களிப்புச் செய்ய முடியும். வெற்றியின் இனிமையானதும் கசப்பானதுமான பயன்களைப் பெற்றுக்கொள்வதைப் போன்று தற்காலத்தில் தவறுகளையும் விளைவுகளையும் தாங்கிக்கொள்வதற்கு இளைஞர்கள் தயாராக இருக்க வேண்டும். தேசிய மற்றும் சர்வதேச நிலைகளில் இளைஞர்கள் வெறுமனே சேவைகளை அனுபவிப்பவர்கள் அல்ல. தமது மக்களின் எதிர்காலத்தை உருவாக்குகின்ற செயலூக்கமுள்ள பங்கேற்பாளர்களாக அடையாளம் காண்பதற்காக வழியமையும். ஆகவே தலைவர்கள் என்ற வகையில் நாம் எதிர்காலத்தை வடிவமைக்கின்றபோது அவர்களை சரியான முறையில் கடமையை நிறைவேற்றுவதற்கு இளைஞர் சமுதாயத்துக்கு அணுகுமுறைகளை ஏற்படுத்திக்கொடுக்கக் கடமைப்பட்டுள்ளோம்.
நீங்கள் அனைவருமே ட்டுவிட்டர் சமூக வலையமைப்பை உபயோகிப்பவர்கள் என்பதை நான் அறிவேன். அதனால் வியாழக்கிழமை ட்டுவிட்டர் கலந்துரையாடலில் இணைந்துகொள்ளுமாறு உங்களைக் கேட்டுக்கொள்கிறேன்.
இளைஞர் தொடர்பான உலக இளைஞர் மாநாட்டின் அனைத்து விடயங்களும் கலந்துரையாடல்களும் வெற்றிபெற வேண்டுமென நான் வாழ்த்துகிறேன். இதற்காக செலவிடப்பட்ட காலங்கள் ஒருபோதும் நினைவிலிருந்து அழியாதவை என நான் நம்புகிறேன் என்றும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply