அறுதிப் பெரும்பான்மை பலம் இருப்பதால் பா.ஜ.கவுடன் இணைந்து செயற்படுவது இலகு : கெஹலிய ரம்புக்வெல்ல
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் இந்தியாவின் புதிய பிரதமரான நரேந்திர மோடியும் ஒரேமாதிரியான சிந்தனைப் போக்குடையவர்கள். இதனால் இரு நாடுகளுக்கும் சாதகமான பல திட்டங்களை முன்னெடுக்கவும், இராஜதந்திர உறவுகளை மேலும் வலுப்படுத்தவும் முடியும் என வெகுஜன ஊடகத்துறை அமைச்சரும், அமைச்சரவை ஊடகப் பேச்சாளருமான கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார். இந்திய நாடாளு மன்றத் தேர்தலில் பாரதீய ஜனதாக் கட்சி பெரும்பான்மை பலத்துடன் ஆட்சிய மைத்தி ருப்பதால் அந்த அரசாங்கத்துடன் இணைந்து செயற் படுவது இலகுவா னது. கூட்டணிக் கட்சிகளில் தங்கியிருக்கும் நிலை காணப்பட்டால் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண்பதிலும், முடிவுகள் எடுப்பதிலும் நெருக்கடிநிலை ஏற்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு நேற்று வெகுஜன ஊடகத்துறை அமைச்சில் நடைபெற்றது. இந்திய புதிய பிரதமராக தெரிவாகியுள்ள நரேந்திர மோடியுடன், இலங்கை அரசாங்கம் எவ்வாறான உறவுகளைப் பேணும் என ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும்போதே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.
தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர், பாரதீய ஜனதாக் கட்சி பெரும்பான்மை பலத்தைப் பெற்று மத்தியில் ஆட்சியமைத்துள்ளதால் இலங்கைக்கு அதனுடன் இணைந்து செயற்படுவது இலகுவானது. பலம்வாய்ந்த அரசாங்கமாக இருக்கும்போது விவகாரங்களை கையாள்வது கடினமாக இருக்காது. கூட்டணிக் கட்சிகளில் தங்கியிருக்கும்போது அதிக அழுத்தங்களுக்கு முகங்கொடுக்க நேர்வதோடு முடிவுகளை எட்டுவதிலும் நெருக்கடிநிலை உருவாகும். எமது அரசாங்கமும் பெருபான்மை பலத்துடனே ஆட்சியிலுள்ளது.
கடந்த காலத்தில், தமிழ்நாடு அரசு, இலங்கை தொடர்பான விவகாரங்களில் மத்திய அரசாங்கத்துக்குப் பல்வேறு அழுத்தங்களைக் கொடுத்தது. இம்முறை தேர்தலில் செல்வி ஜெயலலிதாவின் கட்சி தமிழ்நாட்டில் கூடுதல் ஆசனங்களைப் பெற்றாலும் மத்திய அரசாங்கம் அவர்களின் ஆதரவில் தங்கியிருக்கவில்லை.
நரேந்திர மோடி அனைவரையும் அரவணைத்துச் செல்லக்கூடிய ஒருவர். அதனால் சகல கூட்டுக் கட்சிகளுடனும் அனுசரித்து செயற்படுவார். நரேந்திர மோடி தேர்தலில் வெற்றிபெற்றவுடன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே முதன் முதலில் அவருக்கு வாழ்த்துத் தெரிவித்ததோடு, இலங்கைக்கு வருமாறு அழைப்பும் விடுத்தார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவி னதும், இந்திய புதிய பிரதமர் மோடியினதும் அரசியல் வாழ்வை நோக்கினால் இருவரின் வாழ்விலும் பல்வேறு ஒற்றுமைகள் காணப்படுகின்றன. இருவருக்குமிடையில் தொடர்புகள் மற்றும் நெருக்கங்கள் காணப்படுகின்றன. இருவரும் ஒரே மாதிரியான சிந்தனைப்போக்கை உடையவர்கள்.
இலங்கைக்கும் இந்தியாவுக்கு மிடையில் வரலாற்று காலந்தொட்டு நெருங்கிய உறவு காணப்படுகிறது. காலத்துக்குக் காலம் இரு நாடுகளின் உறவில் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. ஒரு காலகட்டத்தில் இந்தியாவுக்கு எதிராக புத்தகங்கள் கூட இங்கு வெளி யிடப்பட்டன. மற்றொரு காலப்பகுதியில் இந்தியா எமது மிக நெருங்கிய நட்பு நாடாகக் கருதப்பட்டது. அரசியல் கொள்கை மாற்றங்களின்போது சில மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன.
புதிதாக ஆட்சிக்கு வந்துள்ள பாரதீய ஜனதாக் கட்சியுடன் பிரிக்கப்படாத கொள்கையுடன் போதுமானளவு உறவுகளை வலுப்படுத்த முடியுமென நம்புகிறோம். இருநாட்டுத் தலைவர்களுக்குமிடையில் பல ஒற்றுமைகள் காணப்படுவதால் சாதகமான நடவடிக்கைகளில் ஈடுபடவும், இராஜதந்திர உறவுகளை மேலும் பலப்படுத்தவும் முடியும் என்றார்.
ஜனாதிபதியின் சீன விஜயத்தினால் இலங்கை இந்திய உறவில் பாதிப்பு ஏற்படுமா என வினவப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர், ஜனாதிபதியின் சீன விஜயம் பல மாதங்களுக்கு முன் திட்டமிடப்பட்டதொன்று.
நரேந்திர மோடியின் தெரிவுக்கும் சீன விஜயத்து க்கும் எதுவித தொடர்பும் கிடையாது. ஜனாதிபதியின் சீன விஜயத்தினால் இரு நாட்டு உறவில் பாதிப்பு ஏற்படாது எனவும் தெரிவித்தார். உலகில் எப்பாகத்தில் இந்திய வம்சாவளியினர் வாழ்ந்தாலும் அவர்கள் தொடர்பில் இந்தியாவுக்கு பொறுப்பு இருப்பதாக நரேந்திர மோடி தெரிவித்திருப்பது குறித்து வினவப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர், நரேந்திர மோடியின் இந்தக் கருத்தில் எதுவித தவறும் இருப்பதாகத் தெரியவில்லை.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply