எபோலா நோய் செனிகல்லிலும், நைஜீரியாவிலும் கட்டுப்படுத்தப்பட்டதாக தகவல்
மேற்கு ஆப்பிரிக்க நாடான கினியாவில் பரவத் தொடங்கிய எபோலா என்னும் விஷத் தொற்றுநோயால் அண்டை நாடுகளான லைபீரியா, சியரா லியோன் மற்றும் நைஜீரியா போன்ற நாடுகளிலும் சேர்த்து பலியானவர்களின் எண்ணிக்கை 2811ஆக மாறியுள்ளது என்று உலக சுகாதாரக் கழகம் நேற்று வெளியிட்ட அறிக்கை ஒன்றில் தெரிவித்தள்ளது. கடந்த 14ஆம் தேதி வெளியிடப்பட்ட 2630 என்ற பலி எண்ணிக்கையைத் தொடர்ந்து கடந்த 18ஆம் தேதி வரை 181 பேர் பலியானதாக இந்த அறிக்கை குறிப்பிடுகின்றது. கினியா, லைபீரியா மற்றும் சியரா லியோனில் பலி எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டிருக்கின்றது.
அதிலும் குறிப்பாக லைபீரியா இந்த நோய்த்தக்கத்தில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், செனிகல் மற்றும் நைஜீரியா ஆகிய நாடுகளில் இந்த நோய் பரவுவது தடுக்கப்பட்டுள்ளது என்பது டபியுஎச்ஓவின் தகவல் ஆகும்.
கடந்த ஆகஸ்ட் மாதம் 29ஆம் தேதியன்று செனிகல்லுக்கு வந்த கினியா நாட்டு இளைஞன் ஒருவருக்கு எபோலா நோய்த்தொற்று இருந்ததாக அறிவிக்கப்பட்டது. அதன்பின்னர் அந்த இளைஞன் குணமடைந்ததுடன் வேறு எவருக்கும் நோய்த்தொற்று ஏற்பட்டதான அறிவிப்பு வெளிவரவில்லை.
நைஜீரியாவிலும் 21 பேருக்கு எபோலா நோய்த்தொற்று காணப்பட்டதில் எட்டு பேர் இறந்துள்ளனர். ஆனால் இந்த மாதம் 8ஆம் தேதிக்குப் பிறகு அங்கு புதிய நோயாளிகள் எவரும் பதிவு செய்யப்படவில்லை.
இந்த நோய்த்தொற்று பரவுவதற்கான காலம் 21 நாட்கள் என்றும், புதிய வழக்குகள் பதிவாகாமல் இதைப்போல் இரண்டு மடங்கு நாட்கள் கணக்கிடப்பட்ட பின்னரே ஒரு நாடு இந்த நோயிலிருந்து மீண்டுள்ளதாகக் கருதப்பட முடியும் என்று சுகாதார அமைப்பு கூறுகின்றது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply