ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளின் தற்கொலைப் படை தாக்குதலில் ஈராக் ராணுவத்தினர் 40 பேர் பலி

சிரியா மற்றும் ஈராக்கில் ஆதிக்கம் செலுத்தி வருகிற ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் உலக நாடுகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக விளங்கி வருகிறார்கள். இவர்களை களையெடுப்பதற்காக அமெரிக்கா உள்ளிட்ட சில மேற்கத்திய நாடுகள் ஈராக்குக்கு போர் ஆயுதங்களை வழங்கி வருகின்றன. அந்த ஆயுதங்களை பயன்படுத்தி, ராணுவத்துக்கு துணையாக குர்திஷ் இனத்தவரும் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில்,தலைநகர் பாக்தாத்தில் இருந்து சுமார் 70 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள சிஜிர் நகரில் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளின் தற்கொலைப் படையினர் நடத்திய தாக்குதலில் ஈராக் ராணுவத்தை சேர்ந்த 40 வீரர்கள் பலியாகினர்.

மேலும், 68 ராணுவ வீரர்களை பலுஜா என்ற நகரத்துக்கு ஐ.எஸ்.ஐ.எஸ்.தீவிரவாதிகள் பிணைக்கைதிகளாக சிறைபிடித்துச் சென்றுள்ளனர். இதனையடுத்து, சிஜிர் நகரில் முகாமிட்டிருந்த சுமார் 700 ராணுவ வீரர்களை அந்த இடத்தில் இருந்து வெளியேறும்படி அரசு உத்தரவிட்டுள்ளது.

இது தவிர, பாக்தாத் நகரில் நேற்று நடைபெற்ற கார் குண்டு வெடிப்பு சம்பவங்களில் 26 பேர் பலியாகியுள்ளதாக அரசு தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply