இஸ்ரேலிய வாலிபர்களை கொன்ற 2 பாலஸ்தீன தீவிரவாதிகள் சுட்டுக் கொலை

இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த 3 கல்லூரி மாணவர்களை காஸா முனைப்பகுதியில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஹமாஸ் தீவிரவாதிகள் கடந்த ஜூன் மாதம் கடத்திக்கொலை செய்தனர். அவர்களது உடல்கள் ஹெப்ரான் நகர் அருகே கண்டெடுக்கப்பட்டன. இந்த கொலையில் தங்களுக்கு தொடர்பு இல்லை என்று மறுத்த தீவிரவாதிகள், பின்னர் பொறுப்பு ஏற்றுக்கொண்டனர். இந்த சம்பவத்தையடுத்து காஸா முனைப்பகுதி மீது இஸ்ரேல் ராணுவம் வான்வழியாகவும், தரைமார்க்கமாகவும் தாக்குதலை தொடங்கியது. இதில் 2,100 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர். மேலும், 69 இஸ்ரேலிய வீரர்களும், 6 இஸ்ரேலிய மக்களும் கொல்லப்பட்டனர். நீண்ட இழுபறிக்கு பின்னர் இந்த சண்டை முடிவுக்கு வந்தது.

இருப்பினும் இஸ்ரேல்-ஹமாஸ் தீவிரவாத மோதலுக்கு காரணமாக அமைந்த 3 வாலிபர்கள் கொலை சம்பவத்திற்கு காரணமானவர்களை இஸ்ரேலிய படை வீரர்கள் தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில் ஹெப்ரானில் உள்ள ஒரு வீட்டில் பதுங்கி இருந்த அந்த தீவிரவாதிகளை இஸ்ரேலிய படைவீரர்கள் சுற்றி வளைத்தனர். அப்போது இருதரப்பினருக்கும் இடையே கடும் துப்பாக்கிச்சண்டை நடந்தது. இதில் 2 தீவிரவாதிகளும் சுட்டுக்கொல்லப்பட்டதாக இஸ்ரேலிய ராணுவம் தெரிவித்துள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply