இரு பக்கத்திலும் கட்சித் தாவல் குறித்த சந்தேகம் உள்ளது : அமைச்சர் நிமல்
எதிர்க் கட்சியிலிருந்து சிலர் ஆளும் கட்சிக்கும், ஆளும் கட்சியில் உள்ளவர்கள் எதிர்க்கட்சிக்கும் செல்லவிருப்பதாக சந்தேகங்கள் வெளியாகியுள்ளதாக அமைச்சர் நிமல் சிரிபால டி சில்வா தெரிவித்துள்ளார். மக்களுக்குப் பணியாற்றுவதற்கு இவ்வாறான கட்சித் தாவல்கள் அவசியமில்லை. கட்சிதாவும் எவரையும் நம்பி எமது அரசாங்கம் இல்லை. கட்சித்தாவல்களை வைத்துக்கொண்டு அரசியல் நடத்தவேண்டிய தேவை எமக்கு இல்லையெனவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.இதேவேளை, ஜாதிக ஹெல உறுமய கட்சியுடன் நாம் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தோம். எனினும், தீர்மானம் எதுவும் எட்டப்படவில்லை. ஆளும் கூட்டணியிலிருந்து விலகப்போவதாக அவர்கள் எமக்கு உத்தியோகபூர்வமாக இதுவரை அறிவிக்கவில்லையெனவும் அமைச்சர் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்வியொன்றுக்குப் பதிலளிக்கையில் நேற்று குறிப்பிட்டுள்ளார்.
You can leave a response, or trackback from your own site.

Leave a Reply