ஐ.எஸ்.தீவிரவாதிகளுடன் போரிட ஈராக்குக்கு மேலும் 1500 ராணுவ வீரர்களை அமெரிக்கா அனுப்பியது
ஈராக் மற்றும் சிரியாவில் பெரும்பாலான பகுதிகளை ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் கைப்பற்றி தனிநாடு அமைத்துள்ளனர். சர்வதேச நாடுகளுக்கு புதிய அச்சுறுத்தலாக உருவாகியுள்ள அவர்களை அழிக்கும் நடவடிக்கையில் அமெரிக்காவும், அதன் நட்பு நாடுகளும் ஈடுபட்டுள்ளன. கடந்த ஆகஸ்டு மாதம் முதல் ஈராக்கில் 400 தடவை குண்டுகள் வீசப்பட்டுள்ளன. சிரியாவில் 300 தடவை குண்டு மழை பொழியப்பட்டுள்ளன.இதன் மூலம் நூற்றுக்கணக்கான தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர். ஆயுத வாகனங்களும், பல தீவிரவாத முகாம்களும் அழிக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே, அமெரிக்கா ஏராளமான ராணுவ வீரர்களை அனுப்பியுள்ளன.
அவர்கள் ஈராக் ராணுவத்துக்கு 9 இடங்களிலும், குர்திஷ் பெஷ்மெர்கா படைகளுக்கு 3 இடங்களிலும் பயிற்சி அளித்து வருகின்றனர்.
இவை தவிர அமெரிக்காவின் ராணுவ ஆலோசகர்கள் ஏராளமானவர்கள் ஈராக்குக்கு அனுப்பப்பட்டுள்ளனர். அவர்கள் ஈராக் ராணுவ வீரர்களுக்கு தேவையான போர் ஆலோசனைகளை வழங்கி வருகின்றன.
இருந்தும் ஐ.எஸ்.தீவிரவாதிகள் அமெரிக்கா கூட்டு படையுடன் தொடர்ந்து போரிட்டு வருகின்றனர். எனவே, அமெரிக்கா ஈராக்குக்கு கூடுதலாக மேலும் 1500 ராணுவ வீரர்களை அனுப்பியுள்ளது.
அவர்கள் தற்போது அங்கு முகாமிட்டுள்ள ராணுவ வீரர்களுடன் சேர்ந்து பணிபுரிவார்கள். இந்த தகவலை அமெரிக்க வெள்ளை மாளிகையின் செய்தி தொடர்பாளர் ஜோஷ் இயர்னெஸ்ட் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் ஒபாமா பாராளுமன்ற எம்.பி.க்களை சந்தித்து பேசிய பின்பு இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஏற்கனவே, ஈராக் மற்றும் சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிக்கு எதிராக போரிட ரூ.35 ஆயிரம் கோடி வழங்க பாராளுமன்றத்தில் ஒபாமா கோரிக்கை விடுத்துள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply