வெற்றியிலும் தோல்வியிலும் முஸ்லிம்கள் இறைவனுக்கு நன்றி செலுத்த வேண்டும் :மெளலவி அப்துல் ஹாலிக்

ஆட்சியைக் கொடுப்பதும் பறிப்பதும் இறைவன்தான். முஸ்லிம் சமூகத்தினர் வெற்றியிலும் தோல்வியிலும் இறை வனுக்கு நன்றி செலுத்துபவர்களாக இருக்க வேண்டுமேயன்றி, பட்டாசு கொளுத்தியும் ஊர்வலங்கள் நடத்தியும் மகிழ்ச்சி கொண்டாடக் கூடாது. மாற்று மதத்தவர்களினதும் மாற்றுக் கட்சிக்காரர்களினதும் மனம் புண்டாதவாறு நடந்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியமானதாகும்.

இறைவன் வெற்றியைத் தந்தும் சோதிப்பான், தோல்வியைத் தந்தும் சோதிப்பான் என அஷ்ஷெய்க் மெளலவி அப்துல் ஹாலிக் பாஸி (பாஸி த பந்த்) தெரிவித்தார். கொழும்பு கொள்ளுப்பிட்டி ஜும்ஆப் பள்ளிவாசலில் இடம்பெற்ற ஜும்ஆப் பிரசங்கத்தின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் கூறுகையில், எமது முஸ்லிம் சமுதாயம் கடந்த காலங்களில் முகம்கொடுத்த சோதனைகளை மறந்துவிடக் கூடாது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply