அமெரிக்காவும் இந்தியாவும் இயற்கையில் நட்பு நாடுகள்; பிரதமர் நரேந்திர மோடி பேச்சு
அமெரிக்க அதிபர் ஒப்பாமாவும், பிரதமர் நரேந்திர மோடியும் தில்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில் செய்தியாளர்களை கூட்டாக சந்தித்து வருகின்றனர். ஒபாமாவை வரவேற்பதில் மிகுந்த மகிழ்ச்சியடைவதாக பிரதமர் நரேந்திர மோடி கூறினார். மேலும் அவர் பேசும் போது அமெரிக்காவும் இந்தியாவும் இயற்கையில் நட்பு நாடுகள். குடியரசு தின விழாவில் கலந்து கொள்ள ஒபாமாவை அழைப்பதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன். பயங்கரவாதம் சர்வதேசத்துக்கு மீண்டும் அச்சுறுத்தலாக உள்ளது. நூற்றாண்டின் போக்கை தீர்மானிக்கும் சக்திகளாக இந்தியா – அமெரிக்கா இருக்கும், இரு நாடுகளுக்கு இடையே முதலீட்டு ஒப்பந்தங்கள் மறு ஆய்வு செய்யப்படும். பாதுகாப்பு ஒத்துழைப்பை புதிய கட்டத்திற்கு எடுத்து செல்ல முடிவு செய்யப்பட்டுள்ளது.
அணுசக்தி ஒப்பந்தத்தை செயல்படுத்துவது குறித்து இரு நாடுகள் இடையே உடன்பாடு எட்டப்பட்டது. இரு நாடுகளும் ஒன்றாக கைகோர்த்து நடப்பதில் உறுதிப்பூண்டுள்ளன என்று மோடி கூறினார்.
இதையடுத்து நமஸ்தே என்று கூறி அமெரிக்க அதிபர் ஒபாமா பேச்சை தொடங்கினார். அப்போது அவர் இந்தியாவும் அமெரிக்காவும் இரு பெரும் ஜனநாயக நாடுகள், இந்திய குடியரசு தின விழாவில் கலந்து கொள்வதில் பெரும் மகிழ்ச்சியடைகிறேன். இந்தியாவின் சிறப்பான வரவேற்புக்கு நன்றி. மிகப்பெரிய 2 குடியரசு நாடுகள் இந்த நாளில் கைகோர்த்து உள்ளோம்.
இரு நாடுகளுக்கும் இடையே நூறு பில்லியன் டாலர் வர்த்தகம் நடைபெற வேண்டும். தூய எரிசக்தி, பருவநிலை மாற்றம் குறித்த நடவடிக்கைகள் ஊக்குவிக்கப்படும் கடந்த 2 ஆண்டுகள் இடையே இரு நாடுகளுக்கும் இடையில் வர்த்தகம் அதிகரித்துள்ளது என அதிபர் ஒபாமா கூறினார்.
மேலும் பிரதமர் நரேந்திர மோடி அதிபர் ஒபாமா ஆகிய இருவரும் பேசவதற்கு ஹாட்லைன் வசதி ஏற்படுத்த முடிவு செயப்பட்டுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply