குடியரசு தினவிழாவையொட்டி தமிழக போலீசார் 24 பேருக்கு ஜனாதிபதி விருது

சுதந்திரதினம், குடியரசு தினவிழாக்களையொட்டி தகைசால் பணிக்காகவும், சிறப்பான பணிக்காகவும் போலீசாருக்கு ஆண்டுதோறும் ஜனாதிபதி விருது வழங்கி மத்திய அரசு கவுரவித்து வருகிறது. இன்று (திங்கட்கிழமை) நாடு முழுவதும் குடியரசு தினவிழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி போலீஸ் துறையைச் சேர்ந்தவர்களுக்கு ஜனாதிபதி விருதுகள் பட்டியலை மத்திய அரசு நேற்று மாலை வெளியிட்டது.இந்த பட்டியலில் தமிழக போலீஸ் துறையைச் சேர்ந்த 24 பேர் இடம் பெற்றுள்ளனர். அவர்கள் பெயர் விவரம் வருமாறு:-

1. சுனில்குமார் சிங்-கூடுதல் போலீஸ் டி.ஜி.பி., சீருடைப்பணியாளர் தேர்வாணையம். 2. கண்ணப்பன்-ஐ.ஜி. மாநில உளவுப்பிரிவு. 3. ஆயுஸ்மணி திவாரி-கோவை சரக டி.ஐ.ஜி. 4. வித்யா டி.குல்கர்னி-சேலம் சரக டி.ஐ.ஜி. 5. வீரபெருமாள்-கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு, முதல்-அமைச்சர் பாதுகாப்பு பிரிவு. 6. எஸ்.புளோரா ஜெயந்தி- சென்னை லஞ்ச ஒழிப்பு பிரிவு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு. 7. மாடசாமி-கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு, விருதுநகர் மாவட்ட சூப்பிரண்டு அலுவலகம். 8. என்.சிவகுரு-கோவை போலீஸ் பயிற்சி பள்ளி முதல்வர். 9. ஸ்டான்லி ஜோன்ஸ்- உதவி போலீஸ் கமிஷனர், நெல்லை நகர உளவுப்பிரிவு.

10. பிரித்திவிராஜன்- துணை போலீஸ் சூப்பிரண்டு, ஒருங்கிணைந்த குற்ற நுண்ணறிவு பிரிவு, டி.ஜி.பி. அலுவலகம். 11. கென்னடி-துணை போலீஸ் சூப்பிரண்டு, திருச்சி. 12. சிவலிங்கம்-துணை போலீஸ் சூப்பிரண்டு, திருவள்ளூர் மாவட்ட குற்ற ஆவண காப்பகம். 13. உதயகுமார்-இன்ஸ்பெக்டர், மாநில சிலை திருட்டு தடுப்பு பிரிவு. 14. பொற்செழியன்- இன்ஸ்பெக்டர்-நில மோசடி தடுப்பு பிரிவு,திருவள்ளூர் மாவட்டம். 15. ஜெகதீஷ்-இன்ஸ்பெக்டர், மாநில குற்றப்புலனாய்வு பிரிவு தலைமை அலுவலகம். 16. பழனி-இன்ஸ்பெக்டர், வேலூர் லஞ்ச ஒழிப்பு பிரிவு. 17. வி.கே.சந்திரசேகரன்-இன்ஸ்பெக்டர், சி.பி.சி.ஐ.டி மதுரை. 18. மலைச்சாமி-இன்ஸ்பெக் டர், சிவகங்கை மாவட்ட ஆயுதப்படை. 19. நடராஜன்-இன்ஸ்பெக்டர், முதல் அமைச்சர் பாதுகாப்பு பிரிவு, சென்னை.

20. சாவித்திரி-இன்ஸ்பெக் டர், சேலம் காவல் தொலை தொடர்பு, தொழில் நுட்பபிரிவு. 21. குமார்-சப்-இன்ஸ்பெக்டர், சிறப்பு அதிரடிப்படை, ஈரோடு. 22. சின்னராஜூ-சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர், லஞ்ச ஒழிப்பு பிரிவு,சென்னை. 23. அருணாச்சலம்-சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர், லஞ்ச ஒழிப்பு பிரிவு, சென்னை. 24. சிவகுமார்-சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர், லஞ்ச ஒழிப்பு பிரிவு தலைமை அலுவலகம், சென்னை.

சி.பி.ஐ. போலீசில் 28 பேர் ஜனாதிபதி விருதுக்கு தேர்வு பெற்றுள்ளனர். சென்னை சி.பி.ஐ. போலீசில் பணியாற்றும் போலீஸ் சூப்பிரண்டு சிவஞானம் வெள்ளைப்பாண்டி, துணை சூப்பிரண்டு அய்யாத்துரை லாசரஸ், இன்ஸ்பெக்டர் ருத்திரபதி வளவன், போலீஸ்காரர்கள் ஸ்பிரஜன் ஆகியோர் ஜனாதிபதி விருதுக்கு தேர்வாகி இருப்பதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply