ஈராக்கில் தீவிரவாதிகள் தாக்குதலில் 70 பேர் பலி

சிரியா மற்றும் ஈராக்கின் சில பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஐ.எஸ். தீவிரவாதிகள் தொடர்ந்து தீவிரவாத செயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள். தீவிரவாதிகளை ஒடுக்கும் நடவடிக்கையில் ஈராக் ராணுவம் ஈடுபட்டு உள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை தீவிரவாதிகளுடன் நடத்திய கடும் சண்டையில் தியாலா மாகாணத்தில் ஐ.எஸ். தீவிரவாதிகளின் வசம் இருந்த 24-க்கும் மேற்பட்ட கிராமங்களை ராணுவம் மீட்டது.

இந்தநிலையில் தியாலா மாகாணம், பர்வானா கிராமத்திற்குள் நேற்றுமுன்தினம் தீவிரவாதிகள் புகுந்து அங்கிருந்த வீடுகளுக்கு தீ வைத்தனர். இந்த தாக்குதலில் 70 அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு ஷியா பிரிவு தீவிரவாதிகள் தான் காரணம் என்று சன்னி பிரிவினர் தெரிவித்து உள்ளனர். ஆனால் இதனை ஈராக் ராணுவமும், ஷியா பிரிவினரும் மறுத்து உள்ளனர்.

மேலும், தாக்குதலுக்கு ஐ.எஸ். தீவிரவாதிகள் தான் காரணம் என்று ஷியா பிரிவினர் தெரிவித்து உள்ளனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply