மார்ச் மாதத்தில் இலங்கைக்கு சுற்றுப் பயணம் செல்கிறார் பிரதமர் நரேந்திர மோடி

இலங்கையின் புதிய அதிபராக மைத்திரிபால சிறீசேனா பதவியேற்ற பின் இந்தியாவுடனான நட்புக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் இலங்கை வெளியுறவு மந்திரி சமீபத்தில் தில்லி வந்தார். பிரதமர் மோடி, வெளியுறவு மந்திரி சுஷ்மா சுவராஜ் ஆகியோரை சந்தித்து பேசினார். அப்போது அவர் பிரதமர் மோடியை இலங்கைக்கு வருமாறு அழைத்தார். இலங்கையின் அழைப்பை ஏற்று பிரதமர் நரேந்திர மோடி வரும் மார்ச் மாதம் இலங்கைக்கு பயணம் மேற்கொள்ள உள்ளதாக    கொழும்பில் உள்ள இந்திய தூதரகம்  தகவல் தெரிவித்துள்ளது.எனினும் பிரதமர் மோடி எந்த தேதியில் இலங்கை சுற்றுப் பயணத்தை மேற்கொள்வார் என்று இன்னமும் உறுதியாகவில்லை என்று  இந்திய தூதரக பத்திரிகை தொடர்பு செயலாளர் ஈஷா ஸ்ரீவத்சவா கூறினார். இருப்பினும் மார்ச் மாதம் 14, 15–ந்தேதிகளில் பிரதமர் மோடி இலங்கை செல்ல 99 சதவீத வாய்ப்பு இருப்பதாக அவர் கூறினார்.

1987–ம் ஆண்டு பிரதமராக இருந்த ராஜீவ்காந்தி இலங்கைக்கு சென்றார். அதன் பிறகு இதுவரை எந்த பிரதமரும் அரசு முறை பயணமாக இலங்கை செல்லவில்லை. 2008–ம் ஆண்டு மன்மோகன் சிங் சார்க் மாநாட்டில் கலந்து கொள்ளவே இலங்கை சென்றார். எனவே பிரதமர் மோடியின் பயணம் 28 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய பிரதமர் ஒருவர் இலங்கை செல்லும் பயணமாக இருக்கும். என்று கூறப்படுகிறது. இதற்கிடையில்

இலங்கை அதிபர் மைத்திரிபால சிறீசேனா, அடுத்த மாதம் (பிப்ரவரி) 16–ந்தேதி இந்தியா வருகிறார்.  19–ந்தேதி வரை அவர் டெல்லியில் தங்கி இருந்து பல்வேறு தலைவர்களை சந்தித்துப் பேச உள்ளார். பிரதமர் மோடியும், சிறீசேனாவும் ஈழ தமிழர் பிரச்சினை பற்றி விரிவாக விவாதித்து தீர்வு காண்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply