தலை துண்டிப்போம் என்று ஒபாமாவுக்கு ஐ.எஸ். தீவிரவாதிகள் மிரட்டல்

ஐ.எஸ். தீவிரவாதிகள் சர்வதேச இணைய தளங்களில் ஒரு புதிய வீடியோ வெளியிட்டுள்ளனர். அதில் முகமூடி அணிந்த ஒரு தீவிரவாதி குர்திஷ் வீரரின் தலை துண்டித்து கொலை செய்யும் காட்சி இடம் பெற்றுள்ளது. அதற்கு முன்னதாக தீவிரவாதியின் பேச்சும் இடம் பெற்றுள்ளது. அதில், இஸ்லாமுக்கு எதிராக யார் செயல்பட்டாலும் அவர்களுக்கும் இதே தான் அமெரிக்காவின் வெள்ளை மாளிகைக்குள் நுழைந்து அதிபர் ஒபாமாவின் தலையை துண்டிப்போம்.
பின்னர் அமெரிக்காவை முஸ்லிம் நாடாக மாற்றுவோம். அமெரிக்கா மட்டுமின்றி எங்கள் மீது குண்டு வீசி தாக்கும் பிரான்ஸ், பெல்ஜியம் மற்றும் குர்திஷ் இன மக்கள் மீதும் தாக்குதல் நடத்துவோம்’’ என மிரட்டல் விடுத்தான்.

குறிப்பாக ஐரோப்பிய நாடுகளில் கார் குண்டுகள், வெடிகுண்டுகள் மூலம் தாக்குவோம் என அந்த வீடியோவில் தீவிரவாதி தெரிவித்தான்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply