ஆட்சி மாற்றத்தை காரணம் காட்டி ஐ.நா விசாரணை அறிக்கையை பிற்போடக்கூடாது : த.தே.கூ
இலங்கையில் ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றத்தை காரணம் காட்டி யுத்த குற்றம் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பான ஐ.நா விசாரணை அறிக்கை வெளியீட்டை பிற்போடக்கூடாதென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்;
கடந்த காலத்தில் பல விசாரணைகள் நடத்தப்பட்டபோதும் அவற்றினால் பயன் எதுவும் கிடைக்கவில்லை. குறித்த ஐ.நா விசாரணையினை கொண்டு வருவதற்கு தமிழ்த் தேசிய கூட்டமைப்பும் புலம்பெயர் தமிழர்களும் அதிகளவான முயற்சியினை மேற்கொண்டிருக்கின்றார்கள்.
இந்நிலையில், ஐ.நா மனிதவுரிமைகள் ஆணைக்குழுவின் விசாரணை அறிக்கையின் மூலமாக யுத்தம் தொடர்பான பல கேள்விகளுக்கு விடை கிடைக்குமென நம்புகிறோம். அவ்வாறான ஒன்றின் மூலமாகவே தமிழ் மக்கள் எதிர்பார்க்கும் தீர்வினை நாம் அடைய முடியும்.
கடந்த காலத்தில் எமக்கு ஒத்துழைப்பு வழங்கிய நேச நாடுகள் இந்த விடயத்திலும் எமக்கு ஒத்துழைப்புக்களை வழங்கிய, ஐ.நா விசாரணைக் குழுவின் அறிக்கையினை உரிய காலத்திற்கு வெளியிடுவதற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்’ என தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply