ஐ.நா. அறிக்கை செப்டெம்பரில் எவ்வித மாற்றமுமின்றி வெளியிடப்படும் : கூட்டமைப்பிடம் ஜெப்ரி பெல்ட்மன் தெரிவிப்பு
இலங்கையில் பதவியேற்றுள்ள புதிய அர சுக்கு மனித உரிமைகளைப் பாதுகாத்தல் மற் றும் முறையான நிர்வாகத்தை மேற்கொள்ளல் என்பவற்றுக்கு ஒரு சந்தர்ப்பத்தை வழங்கவே ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் இலங் கை தொடர்பாக இம்மாதம் வெளியிடவிருந்த அறிக்கையை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் வரை பிற்போட்டுள்ளதாக ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூனின் அரசியல் விவகாரங்களுக்கான பிரதி நிதி ஜெப்ரி பெல்ட்மன் நேற்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனான சந்திப்பின் போது தெரிவித்தார்.
அறிக்கையை வெளியிடுவது ஒரு முறை மாத்திரமே பிற்போடப்படுமெனவும் செப்டெம்பர் மாதம் ஜெனீவா மனித உரிமை கள் பேரவை அமர்வில் இந்த அறிக்கை எதுவித மாற்றமுமின்றி வெளியிடப்படுமெனவும் அவர் கூட்டமைப்பு தூதுக்குழுவிடம் உறுதியளித்ததாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் எம்.பி. தெரிவித்தார்.
கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத் தலைவர் இரா. சம்பந்தன் தலைமையிலான குழுவினர் நேற்றுக்காலை கொழும்பிலுள்ள ஐக் கிய நாடுகள் சபை அலுவலகத்தில் ஜெப்ரி பெல்ட்மனைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
இலங்கையில் தற்போது புதிய அரசாங்கமொன்று ஆட்சிப் பொறுப்பை ஏற்றுள்ளது. இந்த அரசாங்கம் பதவிக்கு வருவதற்கு பல எதிர்பார்ப்புக்களுடன் தமிழ் மக்கள் பெருந்தொகையாக வாக்களித்துள்ளனர்.
நூறு நாட்கள் வேலைத் திட்டத்தின் கீழ் இனப்பிரச்சினை தீர்வு உட்பட தமிழர்கள் முகம் கொடுக்கும் எந்தப் பிரச்சினைகள் குறித்தும் தெரிவிக்கப்படவில்லை. வடக்கில் இராணுவத்தினால் பொதுமக்களது காணிகள் 6700 ஏக்கர் அபகரிக்கப்பட்டுள்ளது. இக் காணியில் 1000 ஏக்கரையும் கிழக்கில் 800 ஏக்கரையும் பொது மக்களிடம் மீளவும் கையளிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இராணுவத்தினரால் அபகரிக்கப்பட்ட பொதுமக்களின் காணிகளில் மரமுந்திரிகை மரங்கள் மற்றும் வயல் நிலங்கள் காணப்பட்டன. அவை மீள கையளிக்கப்பட வேண்டும்.
மேலும்இ ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் இலங்கை தொடர்பான அறிக்கை இம் மாதம் வெளியிடப்படும். இதன் மூலம் புரையோடிப் போயுள்ள இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் சந்தர்ப்பம் ஏற்படுமென இலங்கை வாழ் தமிழ் மக்கள் எதிர்பார்த்திருந்தனர். அதிலும் எமது மக்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர் என்று ஜெப்ரி பெல்ட்மனிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தூதுக் குழு எடுத்து விளக்கியது.
கூட்டணி தூதுக்குழுவின் கருத்துக்களை கவனமாக செவிமடுத்த அவர் ஐ.நா. அறிக்கை செப்டெம்பரில் எவ்வித மாற்றமுமின்றி வெளியிடப்படும் என்றார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply