எதிர்க்கட்சி தலைவர் கொலைக்கு கண்டனம்: ரஷியாவில் புதினுக்கு எதிராக 1 லட்சம் பேர் பேரணி

ரஷியா எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் துணை பிரதமருமான போரிஸ் நெம்த்சேவ் (57) சமீபத்தில் மாஸ்கோ கிரம்ளின் மாளிகை அருகே சுட்டுக் கொல்லப்பட்டார். இவர் ஓட்டலில் இருந்து தனது வீட்டுக்கு நடந்து சென்றபோது வெள்ளை காரில் வந்த மர்மநபர் அவரை சுட்டுக் கொன்றான். புதின் எதிர்ப்பாளராக இருந்த அவரை வஞ்சகம் வைத்து சுட்டுக் கொன்றதாக புகார் கூறப்பட்டுள்ளது. இதற்கு கண்டனம் தெரிவித்து அவரது ஆதரவாளர்கள் நேற்று மாஸ்கோ நகரில் மிக பிரமாண்டமான கண்டன பேரணியை நடத்தினார்கள்.

பேரணியில் சுமார் 1 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை இப்பேரணியில் பங்கேற்றனர்.

அவர்கள் தங்கள் கைகளில் போரிஸ் நெம்த்சேவ் படத்துடன் புதினுக்கு எதிரான கோஷங்கள் அடங்கிய அட்டைகளை வைத்திருந்தனர். ‘‘நான் பயப்படவில்லை’’, ‘‘புதின் இல்லாத ரஷியா வேண்டும்’’, ‘‘ஹீரோக்கள் என்றும் மடிவதில்லை’’ என்பன போன்ற வாசகங்கள் அதில் எழுதப் பட்டிருந்தன.

பேரணியினர் போரிஸ் நெம்த்சேவ் சுட்டுக் கொல்லப்பட்ட கிரம்ளின் மாளிகை அருகே வரை சென்றனர். அங்கு மலர்க்கொத்துகளை வைத்து அஞ்சலி செலுத்தி

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply