ஐ.நா பரிந்துரைகளை நிறைவேற்ற இலங்கை ஒத்துழைப்புடன் செயற்படும் : அமைச்சர் மங்கள
எமது நாட்டு மக்களை உள்ளடக்கியதான நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறும் தன்மையுடனான பயணம் மீது நாம் முழுமையான நம்பிக்கை வைத்துள்ளோம். அதனை திருப்தி கரமாக முன்னெடுப்பதற்கான நுட்பங்கள் மற்றும் மனித வளங்களைத் தயார்படுத்தி வருகின்றோம். ஆனாலும் இந்தப் பயணத்திற்கு சர்வதேச சமூகத்தினரின் அனுபவம் மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு, ஆலோசனை என்பன அவசியம் என வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் தெரிவித்தார். ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 28வது கூட்டத் தொடர் நேற்று ஜெனீவாவில் ஆரம்பமானது.
ஆரம்ப அமர்வில் இலங்கை சார்பில் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர உரையாற்றியிருந்தார். இதன்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் உரையாற்றுகையில்,
எமது அரசாங்கம் உலகம் முழுவதிலுமுள்ள பல்வேறு சர்வதேச அமைப்புக்கள் மற்றும் நாடுகளுடன் ஒத்துழைப்புடன் செயற்படவே விரும்புகிறது. இதற்கான எமது அணுகுமுறை பேச்சுவார்த்தைகள், ஒத்துழைப்புக்கள், புரிந்துணர்வு மற்றும் கற்றல் மூலமாக அமையுமேதவிர முரண்பாடாக அமையாது.
இதன் அடிப்படையில், அரசாங்கம் தென்னாபிரிக்க அரசாங் கத்துடன் கடந்தவாரம் பேச்சுவார்த்தை நடத்தியிருப்பதுடன், ஐ.நாவின் விசேட அறிக்கையாளர் பப்லோவுக்கு இலங்கை வருமாறும் அழைப்பு விடுத்துள்ளோம். மனித உரிமை சமவாயத்தில் இலங்கை பங்குதாரர் என்ற ரீதியில் அனைத்து பரிந்துரைகளையும் நிறைவேற்றுவதற்கு ஒத்துழைப்புடன் செயற்படும்.
புதிய அரசாங்கம் பதவியேற்று 48 நாட்கள் பூர்த்தியடைந்திருக்கும் நிலையில் பல்வேறு தடைகளைத் தாண்ட வேண்டியுள்ளது. நிர்வாகக் கட்டுப்பாடு மற்றும் கடந்த அரசாங்கத்தின் இனவாதமான மனப்பான்மை உள்ளிட்ட விடயங்கள் நடைபெறவிருக்கும் பாராளுமன்றத் தேர்தலுக்கு பெரும் சவாலாகவே இருக்கின்றன.
இந்த சவால்களை எதிர்கொண்டு வரலாற்று ரீதியான பயணத்தை அர்ப்பணிப்புடன் முன்னெடுப்பதற்கு அரசாங்கம் முன்னுரிமை அளித்துள்ளது. அரசாங்கத்தின் இந்த முயற்சிக்கு இந்த சபை, ஆணையாளர், பங்குதாரர்கள், சர்வதேச அமைப்புக்கள் மற்றும் இலங்கை டயஸ்போராக்கள் எம்மீது நம்பிக்கைவைத்து எமது செயற்பாடுகளைப் பலப்படுத்துவதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு கோரிக்கை விடுக்கின்றேன்.
அரசாங்கம் தெரிவுசெய்யப்பட்டு குறுகிய காலத்துக்குள்ளேயே வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கமைய, ஊடக சுதந்திரத்தை உறுதிப்படுத்தும் வகையில் தடைசெய்யப்பட்டிருந்த இணையத்தளங் களின் தடைகள் நீக்கப் பட்டுள்ளதுடன், வெளிநாட்டு ஊடகவிய லாளர்களுக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் அகற்றப்பட்டுள்ளன, நாட்டின் அனைத்துப் பாகங்களுக்கும் ஊடகவியலாளர்கள் சுதந்திர மாக செல்ல அனுமதிக்கப்பட் டுள்ளன.
வெளிநாட்டில் வாழும் இலங்கை ஊடகவியலாளர்களை மீண்டும் நாட்டுக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல மனித உரிமை செயற்பாட் டாளர்கள், சிவில் சமூக பிரதிநிதிகள், ஊடக செயற்பாட்டாளர்கள் சுதந்திரமாக தமது பணிகளை அச்சமின்றி மேற்கொள்வதற் கான சூழல் ஏற்படுத்தப்பட்டுள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply