எபோலா தடுப்பு மருந்து முதல் பரிசோதனை வெற்றி
எபோலா தடுப்பு மருந்துகளின் முதல்கட்டப் பரிசோதனை வெற்றிகரமாக முடிந்ததையடுத்து அடுத்த கட்ட ஆராய்ச்சிகள் தொடங்கவுள்ளன. எபோலாவுக்கான ஆற்றல் மிக்கக தடுப்பு மருந்துகளை உருவாக்குவதற்கான முதல்கட்டப் பரிசோதனைகள் ஜெனீவாவில் உள்ள பல்கலைக்கழக மருத்துவமனையில் நடைபெற்று வருகின்றன. இதில் VSV-ZEBOV என்ற தடுப்பு மருந்து, பரிசோதனையை வெற்றிகரமாகக் கடந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்ட மற்றொரு தடும்பு மருந்தின் மூன்றாவது கட்டப் பரிசோதனைகள் மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள மருத்துவமனைகளில் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், இந்த மருந்துகளும் ஓரளவுக்கு பயன் அளிப்பவையாக உள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
You can leave a response, or trackback from your own site.

Leave a Reply