அகதிகளாக 19 ஆயிரம் பேர் இந்தியாவில்: 70 வீதமானோர் நாடு திரும்ப விருப்பமில்லை
யுத்ததின் காரணமாக தமது சொந்த இடங்களை விட்டு நாட்டிலிருந்து வெளியேறிய 19 ஆயிரம் குடும்பங்கள் இந்தியாவில் அகதிகளாக வசிக்கின்றனர். இவர்களில் 70 சதவீதமானோர் அந்த நாட்டிலேயே வாழ விரும்புவதாக மீள்குடியேற்றம் மற்றும் இந்து மத விவகார அமைச்சர் டி. எம் சுவாமிநாதன் தெரிவித்தார். இதேவேளை வடக்கின் இரண்டு மாவட்ட செயலக பிரிவுகளிலுள்ள 1000 ஏக்கர் காணிகளை விடுவிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதன்படி தௌ;ளிப்பழை , கோப்பாய் ஆகிய பிரதேச வலயங்களின் காணிகளே விடுவிக்கப்படவுள்ளது.
மேலும் சம்பூரில் 818 ஏக்கர் காணிகளில் இம் மாதயிறுதிக்கு முன்பு மீளகுடியேற்றம் செய்யவும் அரசு எதிர்ப்பார்த்துள்ளது.
மேலும் யுத்ததினால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்த முஸ்லிம்களையும் சிங்களவர்களையும் மீள்குடியேற்றுவுள்ளதாக அமைச்சர் சுட்டிகாட்டினார்.
நீதி அமைச்சில் இடம்பெற்ற சர்வமத தலைவர்களுடனான கலந்துலையாடலின் போது எத்தாலன்பே தம்மாலோக தேரர் இது தொடர்பில் கேள்வி தொடுத்த போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
யுத்தம் காரணமாக தனது சொந்த இடங்களை இழந்து வாழ்ந்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த மாதம் 25 ஆம் திகதி மூன்று கிராம சேவகர் பிரிவில் 282 குடும்பங்கள் மீள்குடியேற்றப்பட்டன. இதன்படி 1000 ஏக்கர் காணிகளில் 1700 குடும்பங்களை மீள்குடியேற்றினோம்.
இதேவேளை வடக்கின் இரண்டு மாவட்ட செயலக பிரிவிலுள்ள 1000 ஏக்கர் காணிகளை விடுவிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அமைச்சரவையிலேயே குறித்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி தௌ;ளிப்பழை ,கோப்பாய் ஆகிய இரண்டு மாவட்ட செயலக பிரிவின் காணிகளே இ;வ்வாறு விடுவிக்கப்படவுள்ளது.
மேற்குறித்த 1000 ஏக்கர் காணிகளில் 400 ஏக்கர் காணிகளை தற்போது இராணுவம் விடுவித்துள்ளது. இந்நிலையில் ஏனைய 600 ஏக்கர் காணிகள் ஏப்ரல் 30 ஆம் திகதிக்கு முன்பு இராணுவம் விடுவிக்கவுள்ளது.
அத்தோடு அமைச்சரவையின் போது திருகோணமலை மாவட்டத்தின் சம்பூர் பிரதேசத்தில் 818 ஏக்கர் காணிகளிலும் ; இம் மாதயிறுதிக்;குள் மீள்குடியேற்றம் செய்ய தீர்மானித்துள்ளோம்.
இதேவேளை யுத்தம் காரணமாக தமது சொந்த இடங்களை இழந்து விட்டு நாட்டிலிருந்து வெளியேறிய குடும்பங்களில் 19 ஆயிரம் குடும்பங்கள் இந்தியாவில் அகதிகளாக உள்ளனர். இவர்களில் 70 சதவீதமானோர் மீளவும் நாட்டிற்கு திரும்பவிருப்பமில்லாதவரகள் . மாறாக அந்த நாட்டிலேயே அவர்கள் வாழ விரும்புகின்றனர்.
மேலும் 30 சதவீதமானோரே உள்நாட்டிற்கு திரும்ப எதிர்ப்பார்க்கின்றனர். இலங்கையில் போதியளவிலான தொழில் வாய்ப்பு இல்லாமை மற்றும் பூர்வீக நிலங்கள் உரித்துடைமை மீள கிடைக்கப்பெறுமா என்ற சந்தேகமே அதற்கான பிரதான காரணமாகும் என்றார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply