கென்யாவில் நடைபெற்ற தாக்குதல் கொடூரமானது – முற்றிலும் கண்டிக்கத்தக்கது: பிரதமர் மோடி கருத்து
கென்ய பல்கலைக்கழகத்தில் நேற்று 147 மாணவர்கள் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு பிரதமர் மோடி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து தனது டுவிட்டரில் மோடி கூறியிருப்பதாவது; கென்யாவில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதல் மிகக்கொடூரமானது. ஒரு பல்கலைக்கழக வளாகம் மீது நடத்தப்பட்ட இத்தகைய தாக்குதல் பெரும் வருத்தத்தை அளிக்கிறது. இது முற்றிலும் வன்மையாக கண்டிக்கத்தக்கது என்று மோடி கூறியுள்ளார்.
சோமாலியாவின் ஷெபாப் தீவிரவாத குழு முகமூடி அணிந்து நடத்திய இத்தாக்குதலில் 147 மாணவர்கள் கொல்லப்பட்டதுடன், 79 பேர் படுகாயமடைந்தனர். 587 மாணவர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். இத்தாக்குதலுக்கு பின் கென்யா-சோமாலியா எல்லையில் உள்ள காரிஸ்சா, வாஜிர், மண்டேரா மற்றும் டானா ரிவர் ஆகிய 4 கவுண்டிகளிலும் மாலை முதல் காலை வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பேரிடர் மேலாண்மை அதிகாரிகள் கூறியுள்ளனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply