கென்ய பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கி சூடு: பலியான மாணவர்களின் எண்ணிக்கை 147 ஆக உயர்வு
கென்யாவில் உள்ள பல்கலைக்கழக வளாகத்திற்குள் புகுந்த சோமாலிய ஷெபாப் தீவிரவாதிகள் மாணவர்களை பிணைக் கைதிகளாகப் பிடித்து வைத்து தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 70 மாணவர்கள் பலியானதாக முதற் கட்ட தகவல்கள் தெரிவித்தன. எனினும் இறுதி கட்ட தகவலின் படி அங்கு 147 மாணவர்கள் பலியானதாக தெரிய வந்துள்ளது. சோமாலியாவின் எல்லையருகே கென்யாவின் வடகிழக்கு மாகாணத்தில் அமைந்துள்ள கரிஸா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள ஒரு கல்லூரிக்குள் நேற்று காலை முகமூடி அணிந்த ஷெபாப் தீவிரவாதிகள் துப்பாக்கிகளுடன் நுழைந்தனர். இதையறிந்த பாதுகாப்பு படையினர் பல்கலைக்கழக வளாகத்தை சுற்றி வளைத்தனர்.
உடனே அங்கிருந்த மாணவர்களை பிணைக் கைதிகளாக பிடித்துக்கொண்டு தீவிரவாதிகள் போலீசாரை மிரட்டினர். இதையடுத்து இருதரப்பினருக்கும் இடையே கடுமையான துப்பாக்கி சண்டை நடந்நது. ஒரு கட்டத்தில் தீவிரவாதிகள், மாணவர்கள் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கி சூடு நடத்தினார்கள். பாதுகாப்பு படையினரும் தக்க பதிலடி கொடுத்தனர். இந்நிலையில் அந்நாட்டில் உள்ள பல்வேறு கவுண்டிகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply