மஹிந்த ராஜபக்ஷ பிரதமர் பதவிக்கு தகுதியற்றவர் : ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, இந்த நாட்டின் பிரதமர் பதவிக்கு தகுதியற்றவர் என, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் இளைஞர் முன்னணி செயலாளரும் , பாராளுமன்ற உறுப்பினருமான எரிக் பிரசன்ன வீரவர்த்தன தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மஹிந்த ராஜபக்ஷவுக்கு பிரதமர் பதவி வழங்குவது குறித்து செய்தியாளர் மாநாட்டில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போதே எரிக் பிரசன்ன வீரவர்த்தன இதனைக் கூறினார்.
மேலும் இதற்கு முன்னர் நாட்டில் இருந்த சில பிரதமர்கள் கண் சரியாக தெரியாதவர்கள், காது சரியாக கேளாதவர்கள் எனவும் அவர் குறிப்பிட்டார்.
அவ்வாறிருக்க மஹிந்த ராஜபக்ஷ சுகதேகியாக இருப்பதால் அவருக்கு அவ்வாறான பதவியை வழங்க அனுமதியில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply