இலங்கை கூறிய தகவல் தவறு! மறுக்கும் சீனா

கொழும்புக்கு வௌியே சுற்றுவட்ட பாதை அமைப்பது தொடர்பான உத்தேச மதிப்பீட்டில் இருந்து, 30 பில்லியன் ரூபாய்களை குறைப்பதற்கு சீனா ஒப்பந்த நிறுவனம் இணங்கியிருப்பதாக கூறப்பட்ட தகவல் தவறு என அந்த நாடு தெரிவித்துள்ளது. ஜனாதிபதியின் சீன விஜயம் தொடர்பாக விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று முன்தினம் இடம்பெற்றது. இதில் அமைச்சர்களான ராஜித சேனாரட்ன, ரவி கருணாநாயக்க மற்றும் ரவூப் ஹக்கீம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதன்போதே குறித்த தகவல் வெளியிடப்பட்டது. எனினும் இந்தத் தகவல் தவறானது என, இலங்கைக்கான பதில் சீனத் தூதுவர் நேற்று குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் சம்பந்தப்பட்ட நிறுவனத்துடன் பேசியதாகவும் அவர்கள் இவ்வாறான இணக்கப்பாடு ஒன்று எட்டப்படவில்லை எனக் கூறியதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply