ஏமனிலிருந்து 664 இந்தியர்கள் தாயகம் அழைத்துவரப்பட்டனர்
உள்நாட்டுப் போர் நடைபெற்று வரும் ஏமனில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்கும் பணியை மத்திய அரசு தொடங்கியுள்ளது. முதற்கட்டமாக 358 பேர் கப்பல் மூலம் அழைத்து வரப்பட்டனர். நேற்றிரவு 334 இந்தியர்களுடன், இரண்டு விமானப்படை விமானங்கள் மும்பை வந்து தரையிறங்கியது. அதேபோல், ஏர் இந்தியா சிறப்பு விமானம் மூலம் 330 பேர் கொச்சி வந்தடைந்தனர். முன்னதாக மீட்கப்பட்ட 664 இந்தியர்களும் சானா நகரில் இருந்து அண்டை நாடான ஜிபவுட்டிக்கு அழைத்து வரப்பட்டனர். பின்னர் விமானங்கள் மூலம் இந்தியா அழைத்து வரப்பட்டனர்.
ஏமனில், 3,500க்கும் மேற்பட்ட இந்தியர்கள் பணி புரிந்து வருகின்றனர். அவர்களில் பெரும்பாலானோர், கேரளாவைச் சேர்ந்த செவிலியர்கள் ஆவர். இந்நிலையில், அவர்கள் சொந்த ஊர் திரும்புவதற்கான ஏற்பாடுகளை மத்திய அரசு செய்து வருகிறது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply