ட்ஜிபவுட்டியில் இருந்து 225 இந்தியர்களுடன் கிளம்பிய விமானம் மும்பை வந்தடைந்தது
உள்நாட்டுப் போர் உச்சகட்டத்தில் இருக்கும் ஏமன் நாட்டின் ட்ஜிபவுட்டியில் இருந்து இந்திய விமானப் படையின் விமானம் மூலம் மீட்கப்பட்ட 225 இந்தியர்கள் நேற்றிரவு மும்பை விமான நிலையத்தை வந்தடைந்தனர். ஏமனில் அரசுக்கு ஆதரவாக உள்ள சவுதி அரேபியா தலைமையிலான கூட்டுப்படைக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே உச்சகட்ட போர் நிலவி வரும் நிலையில், இந்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் ஏமனின் அண்டை நாடான ட்ஜிபவுட்டியில் இருந்தவாறு ஏமனில் தவிக்கும் இந்தியர்களை தாய்நாட்டுக்கு அழைத்துவரும் பணிகளை கண்காணித்து வருகிறார்.இந்நிலையில் ட்ஜிபவுட்டியில் இருந்து 225 பேருடன் கிளம்பிய சி௧7 க்ளோப் மாஸ்டர் போக்குவரத்து விமானம் நேற்றிரவு 10.40 மணிக்கு மும்பை வந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் 227 பேருடன் கிளம்பிய மற்றொரு விமானம் நள்ளிரவு வந்து செரும் என்று எதிர்பார்ப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
You can leave a response, or trackback from your own site.

Leave a Reply