இஸ்ரேலில் கூட்டணி ஆட்சிக்கு பெஞ்சமின் நெதன்யாகு சம்மதம்

புதிய உடன்படிக்கை எட்டப்பட்டதைத் தொடர்ந்து இஸ்ரேலில் கூட்டணி ஆட்சிக்கு பெஞ்சமின் நெதன்யாகு சம்மதம் தெரிவித்துள்ளார். இஸ்ரேலில் தேர்தல் முடிந்து சுமார் 7 வாரங்கள் ஆகியும் புதிய அரசை அமைப்பதில் இழுபறி நீடித்து வந்தது. ஏற்கனவே பிரதமராக இருந்த நெதன்யாகு, தேர்தலில் எளிமையாக வெற்றி பெற்ற போதிலும் அவரது லிகுட் கட்சி ஆட்சியமைக்கப்போதுமான பலம் பெற்றிருக்கவில்லை. கூட்டணி அரசு அமைக்க மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளும் தோல்வியில் முடிந்தன. இதற்கிடையே, அரசு அமைப்பதற்கான காலக்கெடு நேற்றுடன் முடிவடையவிருந்தது. இதையடுத்து, லிகுட் கட்சிக்கு இருக்கும் 30 இடங்களுடன் மேலும் 30 இடங்களை வலது சாரிக்கட்சிகளிடம் இருந்து பெற்று ஆட்சியமைக்க நெதன்யாகு நேற்று சம்மதம் தெரிவித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply