சவுதி அரேபியா தாக்குதலை நிறுத்தவேண்டும் :அமெரிக்கா வேண்டுகோள்

ஏமனில் நடைபெறும் தாக்குதலை நிறுத்தவேண்டும் என்று சவுதி அரேபியாவுக்கு அமெரிக்கா வேண்டுகோள் விடுத்துள்ளது. இது தொடர்பாக பேச்சு நடத்துவதற்காக அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஜான் கெர்ரி, அரசு முறைப் பயணமாக நேற்று ரியாத் வந்தார். அங்கிருந்து ஜிபவுத்தி சென்ற கெர்ரி, ஏமனில் நடைபெறும் தாக்குதல்கள் குறித்து அமெரிக்கா கவலையடைந்துள்ளதாகத் தெரிவித்தார். மேலும், சவுதி அரேபியா தலைமையில் ஏமனில் நடைபெறும் கூட்டு ராணுவத் தாக்குதல்கள் நிறுத்தப்பட்டால் தான், பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு உதவிப் பொருட்களைக் கொண்டு சேர்க்க முடியும் என்றும் கூறினார். எனவே,  சவுதி அரேபியா உடனடியாக  ஏமன் தாக்குதலை நிறுத்தவேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply