தொழில்நுட்ப கோளாறு: கூடங்குளம் முதல் அணுஉலையில் 1000 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு
நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் 1000 மெகாவாட் மின்திறன் கொண்ட 2 அணு உலைகள் அமைக்கப்பட்டுள்ளது. இதில் முதல் அணுஉலையில் மின்உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. 2–வது அணு உலையில் மின் உற்பத்தி செய்வதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று மாலை, முதல் அணு உலையில் திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதனால் அதில் மின்உற்பத்தி செய்யப்படுவது நிறுத்தப்பட்டது. இதன் காரணமாக 1000 மெகாவாட் மின்உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
இது பற்றி அணுமின் நிலைய அதிகாரிகள் கூறியதாவது:–
கூடங்குளம் முதல் அணுஉலையில் 2013ம் ஆண்டு ஜூலை மாதம் முதல் 1000 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. கடந்த ஜனவரி மாதம் முதல் வணிக ரீதியான மின்உற்பத்தி தொடங்கியது. நேற்று மாலை அணுஉலையில் திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. அதனை சரி செய்ய முடியாததால் 1000 மெகாவாட் மின்உற்பத்தி செய்யப்படுவது நிறுத்தப்பட்டுள்ளது. தொழில்நுட்ப கோளாறை சரிசெய்ய இன்னும் 3 நாட்கள் ஆகும். அதன்பிறகு மின்உற்பத்தி தொடங்கும். 2–வது உலையில் மின்உற்பத்தி செய்வதற்கான சோதனை ஓட்டம் நடைபெற்று வருகிறது. இன்னும் 2 மாதத்தில் மின்உற்பத்தி தொடங்கும் என்றனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply