சீனாவில் 456 பேருடன் ஆற்றில் கவிழ்ந்த கப்பல்: முற்றிலும் மூழ்கும் அபாயம்
சீனாவில் உள்ள யாங்ட்ஸ் நதியில் சென்று கொண்டிருந்த பயணிகள் கப்பல் கடந்த திங்கட்கிழமை இரவு மூழ்கியது. அந்த கப்பலில் 456 பேர் பயணம் செய்தனர். அனைவரும் தண்ணீரில் மூழ்கினார்கள்.
அங்கு மீட்புபணி தொடர்ந்து நடந்து வருகிறது. இதுவரை 14 பேர் மட்டும் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். 65 பேர் உடல்களும் மீட்கப்பட்டுள்ளது. கவிழ்ந்து கிடக்கும் கப்பலில் இன்னும் பலர் உயிரோடு இருக்கலாம் என கருதப்படுகிறது. எனவே தொடர்ந்து மீட்பு பணி நடந்து வருகிறது. ஆயிரக்கணக்காண மீட்பு படையினர் இந்த பணியில் ஈடுபட்டுள்ளனர்.ஆனாலும் 4 நாட்கள் ஆகியும் இதுவரை முழுமையாக மீட்பு பணி நடக்கவில்லை. கப்பலை மேலே தூக்குவதற்காக ராட்சத படகு கிரேன் கொண்டு வரப்பட்டுள்ளது. அதை நிமிர்த்துவதற்கு முயற்சி நடந்து வருகிறது. மேலும் கப்பலில் துளையிட்டு உள்ளே சென்று அங்கு சிக்கி இருப்பவர்களை மீட்பதற்கும் முயற்சி நடக்கிறது.
ஆனால் தற்போதைய நிலையில் கப்பல் முற்றிலும் மூழ்குவதற்கு வாய்ப்பு இருப்பதாக மீட்பு படையினர் கூறுகின்றனர். அப்படி மூழ்கிவிட்டால் உள்ளே உயிருடன் இருப்பவர்கள் அனைவரும் உயிரிழக்க வாய்ப்பு உள்ளது.
இதற்கிடையே கப்பலில் பயணம் செய்தவர்களின் உறவினர்கள் மீட்புபணி நடக்கும் இடத்திற்கு வந்து குவிந்தவண்ணம் உள்ளனர். அவர்களை ஆற்று பகுதிக்கு செல்ல போலீசார் அனுமதிக்கவில்லை. இதனால் அவர்கள் போராட்டத்தில் குதித்தனர். போலீசாரின் தடையை மீறி உள்ளே சென்றார்கள். கடும் வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர். அவர்களை அதிகாரிகள் சமாதானப்படுத்தினார்கள்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply