ஆளில்லா விமானம் பறந்ததால் அமெரிக்காவில் வெள்ளை மாளிகை மீண்டும் மூடப்பட்டது

அமெரிக்காவில் பாதுகாப்பு காரணங்களுக்காக குறிப்பிட்ட பகுதிகளில் ஆளில்லா விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி வாஷிங்டன் ரொனால்டு ரீசன் விமான நிலையத்தில் இருந்து 15 மைல் சுற்றளவிற்கு அந்த விமானங்கள் பறக்க விடக்கூடாது. கடந்த 2001–ம் ஆண்டு அமெரிக்காவில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதற்கு பிறகு இந்த சட்டம் அமலுக்கு வந்துள்ளது.

இந்த நிலையில் வாஷிங்டனில் அதிபர் தங்கியிருக்கும் வெள்ளை மாளிகை அருகே கடந்த ஜனவரி மாதம் ஆளில்லா விமானம் ஒன்று பறக்க விடப்பட்டது.

அதை கண்டுபிடித்த பாதுகாப்பு அதிகாரிகள் உடனடியாக அந்த ஆளில்லா விமானத்தை பறக்க விடாமல் தடுத்து பறிமுதல் செய்தனர். மேலும் பாதுகாப்பு காரணங்கள் கருதி வெள்ளை மாளிகையை சிறிது நேரம் பூட்டினர். இச்சம்பவம் நடந்த போது அதிபர் ஒபாமாவும், அவரது குடும்பத்தினரும் அங்கு இல்லை.

இந்த நிலையில் நேற்று மதியம் மீண்டும் ஒரு ஆளில்லா விமானம் வெள்ளை மாளிகை மீது பறந்தது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அதை தொடர்ந்து வெள்ளை மாளிகை நேற்று மீண்டும் மூடப்பட்டது.

சிறிது நேரம் கழித்து நிலைமை சரியானது. அதையடுத்து சிறிது நேரத்தில் மீண்டும் திறக்கப்பட்டது. அதை வெள்ளை மாளிகை பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply