ரஷ்யாவை பார்த்து பயப்பட தேவையில்லை : புதின்
மேற்கத்திய நாடுகள் ரஷ்யாவை பார்த்து பயப்பட தேவையில்லை என ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் தெரிவித்துள்ளார். அடுத்த வாரம் ரஷ்ய அதிபர் புதின் இத்தாலி செல்ல இருக்கிறார். இந்நிலையில் அந்நாட்டு நாளிதழ் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ள விளாதிமிர் புதின், “உலக மக்களின் மனநிலையில் நிறைய மாற்றம் ஏற்பட்டுள்ளதால், பெரிய அளவிலான போரை மக்கள் விரும்ப மாட்டார்கள் எனவும், ரஷ்யாவிற்கு போரில் ஈடுபடுவதை விட பல முக்கியமான வேலைகள் உள்ளதால், மேற்கத்திய நாடுகள் ரஷ்யாவை பார்த்து பயப்பட தேவையில்லை எனவும் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு உக்ரேனின் ஒரு பகுதியான கிரிமியாவை ரஷ்யாவுடன் இணைத்துக்கொண்ட பிறகு, ரஷ்யாவிற்கும், மேற்கத்திய நாடுகளுக்கும் தொடர்ந்து மோதல் போக்கு நீடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
You can leave a response, or trackback from your own site.

Leave a Reply