பகவத்கீதை போட்டியில் வெற்றி பெற்ற முஸ்லிம் சிறுமி ரூ.11 லட்சத்தை கல்வி வளர்ச்சிக்காக கொடுத்தார்

இஸ்கான் நிறுவனம் ஆண்டு தோறும் பகவத் கீதை போட்டியை நடத்தி பரிசு வழங்கி வருகிறது. இந்த ஆண்டுக்கான போட்டி சமீபத்தில் நடந்தது. இதில் உத்தரபிரதேசம் மாநிலத்தை சேர்ந்த 12 வயது முஸ்லிம் சிறுமி மரியம் சித்திக் பகவத் கீதை போட்டிகளில் கலந்து கொண்டு முதல் பரிசை பெற்றார். மரியம் சித்திக்கிற்கு ரூ.11 லட்சம் பரிசு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி கடந்த சனிக்கிழமை நடந்த விழாவில் உத்தரபிரதேச முதல்–மந்திரி அகிலேஷ்யாதவ் ரூ.11 லட்சம் பரிசை மரியம் சித்திக்கிற்கு வழங்கினார்.

இந்த பரிசை சிறுமி மரியம் உத்தரபிரதேச அரசுக்கு திருப்பிக்கொடுப்பதாக அறிவித்தார். இது தொடர்பாக மரியம் சித்திக் கூறியதாவது:–

உத்தரபிரதேசத்தில் உள்ள ஆதரவற்ற மற்றும் ஏழைக்குழந்தைகளின் கல்வி மேம்பாட்டுக்காக இந்த பரிசுப்பணம் ரூ.11 லட்சமும் செலவிடப்பட வேண்டும் என்று விரும்புகிறேன். நோபல் பரிசு பெற்ற பாகிஸ்தானை சேர்ந்த மலாலா கல்விக்காக பாடுபட்டு வருவதைப் பார்த்து நானும் இந்த முடிவுக்கு வந்துள்ளேன்.

ஏழை குழந்தைகள் ஒவ்வொருவரும் கல்விபெற வேண்டும். கல்வி ஒன்றால் மட்டுமே அவர்களது தலை விதியை மாற்றமுடியும்.

எனக்கு பரிசு வழங்கி கவுரவித்த உத்தரபிரதேச அரசுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். ஏழைக் குழந்தைகள் கல்வி பெற வேண்டும் என்பதற்காகவே நான் ரூ. 11 லட்சத்தை திருப்பிக்கொடுத்துள்ளேன். இவ்வாறு மரியம் சித்திக் கூறினார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply